IND vs WI: தரைக்கு மேல் பேட்.. ஹெட்மயர் அவுட்.. வைரலாகும் வீடியோ!
Shimron Hetmyer's Controversial Run-Out: லக்னோவில் நடந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டியில் ஷிம்ரான் ஹெட்மயரின் ரன் அவுட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனது மட்டை தரையில் படாமல் க்ரீஸிற்கு மேல் இருந்ததால் மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார். இந்த முடிவால் அதிருப்தியடைந்த ஹெட்மயர், நடுவர்களுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சர்ச்சை கிரிக்கெட் விதிகளின் நுணுக்கமான விளக்கத்தை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
லக்னோ ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான முதல் டி20 போட்டி மிகுந்த பரபரப்புடன் அரங்கேறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன் ஷிம்ரான் ஹெட்மயர், வெறும் 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இருப்பினும், ஆட்டமிழந்த பிறகு ஹெட்மயரின் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது. இதனை தொடர்ந்து, ஹெட்மயர் நடுவரை நேரடியாக எதிர்கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப், ரூதர்போர்ட் அரைசதம்.. இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!




முதல் டி20 போட்டியில், இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் 6வது ஓவரில், அக்சர் பட்டேலின் பந்துவீச்சில் ஷாய் ஹோப் கவர் திசையில் ஒரு பந்தை அடித்தார். அக்சர் தனது இடதுபுறம் குதித்து பந்தைத் தடுக்க முயன்றார். இந்த முறை, பந்து அவரது கையில் பட்டு கவர் திசையில் சென்றது. இதற்கிடையில், ஹெட்மயரும் ஹோப்பும் ஓட முயன்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் வேகமாக பந்தை நோக்கி ஓடி, அதை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் வீசினார். ஹெட்மயர் கிரீஸை அடைய டைவ் அடித்தார். ஆனால் அவரது பேட்டும் அதன் கைப்பிடியும் தரையில் படாமல் க்ரீஸூக்கு மேல் இருந்தது. அதே நேரத்தில் சஞ்சு சாம்சன் ஸ்டம்புகளை தட்டினார். மூன்றாவது நடுவர், ரீப்ளேயை நீண்ட நேரம் பார்த்த பிறகு ஹெட்மயரை ரன் அவுட் என அறிவித்தார்.
ஹெட்மயர் ரன் அவுட்:
Shimron Hetmyer OUT or NOT OUT under the new run out rule?
The way Hetmyer looked after being given out, he clearly seemed very unhappy with the decision and was hesitant to leave the field.
What do you think?
#INDvsWI https://t.co/kRcfAEnxRX— Tapas. (@lmTapas15) October 6, 2026
அவுட் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு ஹெட்மயர் வெளிப்படையாகவே அதிருப்தி அடைந்தார். அவர் நடுவர்களிடம் பேசி, தனது முடிவை நியாயப்படுத்த முயன்றார். இருப்பினும், நடுவர்கள் அவரை ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், மறு ஒளிபரப்புகளில் ஹெட்மயரின் மட்டை கிரீஸுக்குப் பின்னால் தரையில் படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மூன்றாவது நடுவர், கேமராக்களின் பல்வேறு கோணங்களையும் ஆராய்ந்த பிறகு, அந்த முடிவை உறுதி செய்தார்.
ஹெட்மயர் வெறும் 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தார். அவரது இன்னிங்ஸில் ஒரு பவுண்டரியும் இருந்தது. இருப்பினும், தவறான நேரத்தில் ஓட முயன்றது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.