AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அனிருத் – காவ்யா மாறனை நேரில் வாழ்த்திய தல தோனி மற்றும் அஜித்குமார் – வைரலாகும் புகைப்படங்கள்

இசையமைப்பாளர் அனிருத் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 22, 2026 இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் அனிருத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனிருத் காவ்யா மாறனை வாழ்த்தினார்.

அனிருத் – காவ்யா மாறனை நேரில் வாழ்த்திய தல தோனி மற்றும் அஜித்குமார் – வைரலாகும் புகைப்படங்கள்
அனிருத் திருமண வரவேற்பில் அஜித் குமார் மற்றும் தோனி
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Nov 2026 21:37 PM IST

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 22, 2026 இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அனிருத்தின் உறவினரும் பிரபல நடிகருமான ரஜினிகாந்த் கலந்துகொண்டார். விழாவுக்கு வருகை தந்த நடிகர் அஜித் குமாரை ஆரத்தழுவி நடிகர் ரஜினிகாந்த் வரவேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அனிருத் – காவ்யா மாறனை நேரில் வாழ்த்திய தல தோனி

மேலும், அவரைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் அனிருத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனிருத் மற்றும்  காவ்யா மாறனை வாழ்த்தினார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த தோனி முதன்முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

அவருடன் நடிகர் அஜித் குமாரும் இந்த போட்டியில் கலந்து கொண்டார். இதனையடுதத்து ரெட்டை தல என எம்.எஸ்.தோனி மற்றும் நடிகர் அஜித்தின் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக நவம்பர் 21, 2026 நேற்று நடைபெற்ற நிகழ்வில் அரசியல் தலைவர்களான முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கேரள முதல்வர் வி.டி.சதீஸன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா மாநில அமைச்சர் நாரா லோகேஷ், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Follow Us