AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கார்த்தியின் 31வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – அப்டேட் கொடுத்த மோகன் ராஜா!

Karthi 31 Movie Shooting Update: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மக்களிடையே பரிட்சயமான இயக்குநராக இருந்துவருபவர் மோகன் ராஜா. இவர் கார்த்தியின் 31வது திரைப்படத்தில் இயக்குநராக பணியாற்றவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என அவர் அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

கார்த்தியின் 31வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – அப்டேட் கொடுத்த மோகன் ராஜா!
கார்த்தி 31 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Nov 2026 21:14 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பேமஸான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மோகன் ராஜா (Director Mohan Raja). இவரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. இவர் சிரஞ்சீவி (Chiranjeevi) முதல் ரவி மோகன் (Ravi Mohan) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பல ரீமேக் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் தனது எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கிய முதல் திரைப்படம்தான் தனி ஒருவன் (Thani Oruvan). இதில் ரவி மோகன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்த நிலையில், சிறப்பான வெற்றியை கொடுத்தது. இதன் பிறகு சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். தமிழில் இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படங்களும் உருவாகவில்லை.

இந்நிலையில் தற்போது கார்த்தியின் (Karthi) 31வது திரைப்படத்தில் (Karthi31 Movie) இவர் இயக்குநராக இணைந்துள்ளார். சமீபத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த மோகன் ராஜா கார்த்தி 31 படத்தின் ஷூட்டிங் அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: டேர்டெவில் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அஜித்குமார் – வைரலாகும் தகவல்

கார்த்தியின் 31வது திரைப்படத்தின் ஷூட்டிங் தொடக்கம் குறித்து மோகன் ராஜா அப்டேட்:

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பேசியிருந்த இயக்குநர் மோகன் ராஜா அதில், “ஆம், நான் எனது அடுத்த படத்தில் கார்த்தியுடன் பணியாற்றிவருகிறேன். இப்படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, மேலும் கார்த்தி 31 படத்தின் ஷூட்டிங், 2027 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்கும் என நினைக்கிறேன்” என்று அதில் அவர் கூறியிருந்தார்.

கார்த்தியுடன் 31வது திரைப்படத்தில் இணைந்தது தொடர்பாக இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் தமிழில் படங்கள் உருவாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. இவர் தற்போது கார்த்தியின் 31வது படத்தை இயக்கும் இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறாராம். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 பிளாக்பஸ்டர்.. எடிட்டர் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நெல்சன் திலீப்குமார்!

இவர்கள் இருவரும் ஜோடியாக பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் 2027 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்கும் நிலையில், 2027ம் ஆண்டு இறுதியில் அல்லது 2028ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us