AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டேர்டெவில் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அஜித்குமார் – வைரலாகும் தகவல்

The first schedule of Daredevil has reportedly completed | நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டேர் டெவில். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

டேர்டெவில் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அஜித்குமார் – வைரலாகும் தகவல்
டேர்டெவில்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Nov 2026 16:14 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் இறுதியாக படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலானது. தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தனது கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்ததால் அடுத்தப் படத்தில் நடிக்க சற்று தாமதம் ஆனது. தற்போது நடிகர் அஜித் குமார் தொடர்ந்து தனது ரேஸிங் பணிகளை முடித்த பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

அதன்படி நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது 64-வது படமாக உருவாகி வருகின்றது டேர் டெவில். இந்தப் படத்தை நடிகை ஷாலினி அஜித் குமார் தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த டேர்டெவில் படத்தின் ஷூட்டிங் கடந்த நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

டேர்டெவில் பட முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அஜித்குமார்:

இந்த நிலையில் தற்போது டேர்டெவில் படத்தின் ஷூட்டிங் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, அஜித் குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ (DareDevil) திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, அஜித் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், பிற நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி முடிந்ததும், அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாத படப்பிடிப்பில் அஜித் மீண்டும் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

Also Read… கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்கில் டிடிஃஎப் வாசனின் கேம் பிளே.. கண்டித்த விஜய் சேதுபதி – ப்ரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மிஷ்கினுக்கும் எனக்கும் தந்தை – மகள் போன்ற உறவு உள்ளது… நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!

Follow Us