இன்றைய தலைமுறையினர் அப்படி இருப்பது வருத்தமளிக்கிறது – இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஓபன் டாக்
Music Director Sam CS Recent Interview Viral On Social Media | தமிழ் சினிமாவில் பிரபல இசையாமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இன்றைய இளம் தலைமுறையினரின் இசை விருப்பம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் (Sam CS). தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பாளராக மட்டும் இன்றி பாடகராகவும் பாடலாசிரியராகவும் வலம் வருகிறார் சாம் சி.எஸ். கடந்த 2010-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதன்படி இவரது இசையில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் சத்யவான் சாவித்திரி. நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்து இருந்தார்.
இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது இசையில் அடுத்தடுத்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




இன்றைய தலைமுறையினர் அப்படி இருப்பது வருத்தமளிக்கிறது:
அதன்படி அந்தப் பேட்டியில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது, இன்றைய இளைஞர்கள் அதிக சத்தத்தைக் கேட்டுப் பழகிவிட்டார்கள். தற்போதைய இசையமைப்பாளர்கள் அந்த அதிக சத்தத்திலிருந்தே இசையை உருவாக்குகிறார்கள். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரின் இசையைக் கேட்டு வளர்ந்த என்னால், இந்த பாணியை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.
இன்று ஏ.ஆர். ரஹ்மானையே பழையவர் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனால், அவரும் இளையராஜாவும் இன்றும் களத்தில் தான் இருக்கிறார்கள். இந்தத் தலைமுறையினர் இனிமையான இசையைக் கேட்காமல் இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. அதனால், எனக்கு விருப்பம் இல்லையென்றாலும், காலத்தின் கட்டாயத்தால் இந்த நவீன இசைப் போக்கிற்கு மெல்ல மெல்ல என்னைப் பழக்கப்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SamCS:
“Youngsters nowadays are habituated to loud Noise. Current Music directors are extracting music from those loud noise. But I’m not able to convert it, as I grew up listening to ARR & Ilaiyaraaja. Now audience are saying that even #ARRahman is old, but both ARR and Ilaiyaraaja are in the field now. I’m unhappy that this Generation, is not listening to pleasent music. So i slowly started adopting to this trend music, Eventhough i don’t like those” https://t.co/vMLoQNr50X— AmuthaBharathi (@CinemaWithAB) November 20, 2026