பிக்பாஸில் வாரம் முழுவதும் அநாகரீகமாக நடந்துகொண்ட ஜேசன்… அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் புரோமோ வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 11-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் 11-வது வாரம் முழுவதும் ஜேசன் சஞ்சய் வீட்டில் உள்ளவர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). இந்த நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காமென் மேன் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொது மக்களுக்களில் இருந்து 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் மொத்தம் இரண்டு காமென் மேன் போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து வந்த ஜேசன் கௌசிக் அதிக அளவில் மற்ற போட்டியாளர்களிடையே அநாகரீகமாக நடந்துக்கொள்கிறார். இது நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
ஜேசன் கௌசிக் போட்டியாளர்கள் இடையே மட்டும் இன்றி கடந்த வாரம் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார். இதனால் அவரை பொதுமக்கள் மற்றும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களும் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் வாரம் முழுவதும் அநாகரீகமாக நடந்துகொண்ட ஜேசன்:
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 77-வது நாளில் இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த வாரம் முழுவதும் ஜேசன் கௌசிக் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே எவ்வளவு அநாகரீகமாக நடந்துகொண்டார் என்பது குறித்து விஜய் சேதுபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார். அதிலும் குறிப்பாக அரசனை கேள்வி கேட்கும் டாஸ்கில் வினோத் பாபுவை நோக்கி கால் நீட்டியது பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலளிக்க முடியாமல் ஜேசன் கௌசிக் உறைந்து நிற்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Sai Pallavi: அனைத்தையும் ரசித்துப் பார்ப்பேன்.. திரைப்படங்கள் குறித்து சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Day77 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/k37izrbwit
— Vijay Television (@vijaytelevision) November 22, 2026
Also Read… ட்ரெயினில் ப்ரோமோஷன்.. அப்பா குட்டி படத்திற்காக வித்தியாசமான ப்ரோமோஷனில் இறங்கிய விஜய் ஆண்டனி!