AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டபுள் எவிக்‌ஷன் கன்ஃபார்ம்… பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் யார்? வைரலாகும் தகவல்

Bigg Boss Tamil Season 10 Double Eviction Update Here | தமிழ் சின்னத்திரையில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 11-வது வாரமும் டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டபுள் எவிக்‌ஷன் கன்ஃபார்ம்… பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் யார்? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Nov 2026 12:15 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி சின்னத்திரையில் வருடம் வருடம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் தமிழ் சிசன் 10 நிகழ்ச்சி (Bigg Boss Tamil Season 10) கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து 77 நாட்களைக் கடந்துள்ளது இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் இந்த 11-வது வார இறுதியில் உள்ளனர். இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு நாளுமே விறுவிறுப்பாக சென்று கொண்டு வருகின்றது. அதே போல இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது வார இறுதி நாளான இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்து பேசுகிறார். அதில் அவர் வாரம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் இன்றி வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார் என்றும் தெரிவிக்கிறார்.

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் யார்?

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த 9-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து டபுள் எவிக்‌ஷன் நடைப்பெற்று வருகின்றது. அதன்படி 9-வது வாரம் அஸ்மிதா மற்றும் அக்‌ஷிதா இருவரும் வீட்டில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து 10-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவினாஷ் மற்றும் முத்தழகி ஆகியோர் டபுள் எவிக்‌ஷன் முறையில் வீட்டில் இருந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து இந்த 11-வது வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷாதிகா மற்றும் முகேஷ் இருவரும் டபுள் எவிக்‌ஷன் முறையில் இன்று வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… கீர்த்தி மற்றும் கிருத்தி நடனத்தில்… ஜனவரி 12 விடுதல படத்திலிருந்து வெளியான டிவிக்கி டிவிக்கி பாடல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

 

Also Read… 12 ஆண்டுகளைக் கடந்தது சிபி சத்யராஜின் நாய்கள் ஜாக்கிரதை படம் – வைரலாகும் பதிவு

Follow Us