AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அருண் விஜய் பர்த்டே ஸ்பெஷல்…இருளன் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!

Arun Vijays Irulan Movie Release Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள இருளன் படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அருண் விஜய் பர்த்டே ஸ்பெஷல்…இருளன் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
இருளன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Nov 2026 16:14 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகுமாரின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் அருண் விஜய் (Arun Vijay). இவர் நாயகனாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் இவரது படங்கள் ரசிகர்களிடையே வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக பலப் படங்களில் நடித்து வந்த நடிகர் அருண் விஜய் வில்லனாக அஜித் குமாரின் படத்தில் நடித்தப் பிறகு மாபெரும் வரவேற்பைப் பெற்றார். அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜயின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் ரெட்ட தல.

இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து இருந்த நிலையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்தின் பெயர் இருளன். இந்தப் படத்தினை இயக்குநர் முத்தையா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

அருண் விஜய் பர்த்டே ஸ்பெஷல்…இருளன் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த இருளன் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… டிடிஃஎப் பார்த்து பொறாமையா? அடுக்கடுக்கான கேள்விகளை ஜேசனிடம் மாறிமாறி கேட்ட போட்டியாளர்கள் – திமிருக்காட்டிய ஜேசன்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரத்தமும் சதையும் தெறிக்க தெறிக்க… ஓடிடியில் வெளியாகி உள்ள கீர்த்தி சுரேஷின் அக்கா வெப் சீரிஸ் எப்படி இருக்கு? 

Follow Us