AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஹபீபி படத்தை பாராட்டி பேசிய நடிகர் மம்முட்டி…. இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

Actor Mammootty Praised Habeebi Movie | தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை மிகவும் அழகாக காட்டியப் படம் ஹபீபி. இந்தப் படத்தினைப் பார்த்த நடிகர் மம்முட்டி பாராட்டி பேசியது குறித்து இயக்குநர் மீரா கதிரவன் மகிழ்ச்சி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹபீபி படத்தை பாராட்டி பேசிய நடிகர் மம்முட்டி…. இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
மம்முட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Nov 2026 17:03 PM IST

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் இதுவரை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் மக்கள் விரோத செயல்களை செய்பவர்களாகவுமே காட்சிப்படுத்தி வந்தனர். இதன் காரணமாக இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறினால் அது மிகையாகாது. இப்படி தொடர்ந்து ஒரு சமூகத்தினர் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு எளிமையானது என்றும் அவர்கள் எந்த மாதிரியன வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் மிகவும் அழகாக காட்டி இருந்தது இந்த ஹபீபி (Habeebi) படம் . இந்தப் படத்தினை இயக்குநர் மீரா கதிரவன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது தமிழ் மொழியில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்கள் இடையேயும் அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஓம் படத்தின் விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி ஹபீபி படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் தனுஷிற்கு இவ்வளவு சிறப்பான நடிப்பு எப்படி என்பதை தற்போது புரிந்துகொண்டதாக கூறினார். மேலும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அற்புதமான இஸ்லாமியப் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

ஹபீபி படத்தை பாராட்டி பேசிய நடிகர் மம்முட்டி:

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மீரா கதிரவன், உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், மகத்தான கலைஞர், இன்னொருவரின் திறமையை அடையாளம் கண்டு, மற்றொரு திரைப்படத்தின் மேடையில் மனம் திறந்து பாராட்டுவது, கலையின் மீதான பேரன்பும் பெருந்தன்மையுமன்றி வேறென்ன? மம்முட்டி சாரின் வார்த்தைகள் எங்கள் எளிய முயற்சிக்குக் கிடைத்த பெருவெளிச்சம். இன்னும் தொலைதூரக் கனவுகளை நோக்கிப் பயணிப்பதற்கான நம்பிக்கையும் உத்வேகமும்! பேரன்பின் கலைஞன் மம்முக்காவுக்கு நெஞ்சார்ந்த நன்றி! இந்த நெகிழ்வான தருணத்தை அழகாகப் பதிவுசெய்து பகிர்ந்துவரும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்! என்று தெரிவித்துள்ளார்.

Also Read… நடிகர் வைபவ் நடிப்பில் வெளியானது மணிகண்டா படத்தின் டீசர்!

இயக்குநர் மீரா கதிரவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… பா.ரஞ்சித்தின் அந்தப் படத்தில் எனது ரோலில் முதலில் தேர்வானது அசோக் செல்வன் தான் – கலையரசன் சொன்ன சுவாரஸ்யமான விசயம்

Follow Us