AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யூசுப் கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ்

Actor Dhanush Praised Habeebi Movie | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் ஹபீபி. இந்தப் படத்தினை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் தற்போது பாராட்டி பதிவை வெளியிட்டு உள்ளார்.

யூசுப் கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jun 2026 16:29 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தனது கடின உழைப்பின் மூலமாக இந்த இடத்தில் இருந்தாலும் இவர் சினிமாவில் அறிமுகமாக முக்கிய காரணம் அவரது தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா தான். இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கிய படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் தனுஷ். அவர் அறிமுகமான முதல் படத்தில் பல நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக சினிமாவில் இந்த உயரத்தை எட்டி உள்ளார். முன்னதாக தனுஷின் அண்ணன் செல்வரகாகவன் இயக்குநராக கலக்கி வந்த நிலையில் பிறகு நடிகராக நடிக்கத் தொடங்கி தற்போது அதிக அளவில் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா நடிகராக தற்போது அறிமுகம் ஆகி உள்ள படம் ஹபீபி. இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா ஒரு இஸ்லாமியராக நடித்து இருந்தார். நடித்து இருந்தார் என்று சொல்வதைவிட அந்த கதாப்பாத்திரத்தில் அவர் வாழ்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இஸ்லாமியப் படம் என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த நிலையில் தனது தந்தையின் நடிப்பில் வெளியான ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ்:

அதன்படி நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து “யூசுப்”கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யா – நஸ்ரியா நடிக்கும் சூர்யா47 பட ஷூட்டிங் எப்போது முடியும்? – தகவல் இதோ!

நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை சியாமந்தா.. குவியும் வாழ்த்து!

Follow Us