AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின் வெட்டு குறித்த சர்ச்சை பேச்சிற்கு மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்

Master Mahendran clarifies controversial speech | தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக வலம் வரும் மாஸ்டர் மகேந்திரன் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி செய்திகளில் இடம் பெற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின் வெட்டு குறித்த சர்ச்சை பேச்சிற்கு மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்
மாஸ்டர் மகேந்திரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2026 11:11 AM IST

தமிழ் நாட்டு அரசியல் என்பது தற்போது இந்தியா முழுவதும் உள்ள அனைவரும் கவனிக்க கூடிய ஒன்றாக உள்ளது. தமிழ் நாட்டின் அரசியலில் யாரும் எதிர்பாராத பல விசயங்கள் நடந்தது. ஆம் இந்த 2026-ம் ஆண்டின் தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் போட்டியிட்டனர். ஒரு தரப்பினர் ஆதரவையும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பினையும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதற்கு முந்தைய அரசாக இருந்த திமுகவிற்கும் விஜயின் தவெகவிற்கும் அதிக அளவில் போட்டிகள் இருந்தன. அந்த வகையில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் எதிர்க்கட்சி தலைவராக வர வாய்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால் மக்களின் தீர்ப்பு என்ன என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அதிக அளவில் தவெக-வினர் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியையும் அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் அந்த அரசியலை பலர் விமர்சித்து வரும் நிலையில் திரைத்துறையில் இருந்து சிலர் தளபதி விஜயின் ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக நினைத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வைரலாகி வருகின்றனர். அதில் ஒருவர்தான் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மின்வெட்டு குறித்து பேசியது இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப் பட்டது என்று விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.

மின்வெட்டு குறித்த சர்ச்சை பேச்சிற்கு மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்:

அதன்படி முன்னதாக மாஸ்டர் மகேந்திரன் அளித்தப் பேட்டி ஒன்றில் தொடர்ந்து இந்த அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக மின்வெட்டு குறித்து பேசிய போது அவரது பேச்சு பலரையும் எரிச்சலூட்டும் விதமாக இருந்தது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். மேலும் இப்படியான சிலரின் பேச்சுகள் விஜய்க்கு கலங்கம் ஏற்படுத்தும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் முழு பேட்டியைப் பார்க்கும் போது புரியும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் சோலார் குறித்து பேசியது தவறு என்றும் நான் நன்றாக படிக்கக் கூடிய மாணவர் இல்லை மிகவும் கஷ்டபட்டுதான் பள்ளிப்படிப்பையே முடித்தேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் போல என்று நினைத்தேன் – சமந்தா ரூத் பிரபு

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன் பேச்சு:

Also Read… தனுஷ் 55 படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Follow Us