விஜய் டிவியில் வரப்போகும் ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல்.. வெளியான புரோமோ இதோ!
Onna Irukka Kaththukanum Serial: விஜய் தொலைக்காட்சி என்றாலே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான். இந்நிலையில் விஜய் டிவியில் புது சீரியல் வெளியாகுவதாக சமீபத்தில் புரோமோ வெளியான நிலையில், தற்போது அந்த சீரியலுக்கு ஒண்ணா இருக்க கத்துக்கணும் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) தொடர்ந்து சீரியல்கள் நிறைவுக்கு வருகிறது. இதனால் புது புது சீரியல்கள் உருவாகிவருகின்றன. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian Stores) ஸ்டாலின் (Stalin) மற்றும் நிரோஷா (Nirosha) இருவரும் முக்கிய வேடத்தில் புது சீரியலில் நடிப்பதாக சமீபத்தில் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. ஒரே குடும்பம் தங்களின் ஹோட்டலை எவ்வாறு வைத்து நடத்தி வருகிறார்கள், ஹோட்டலினால் வரும் பிரச்சனைகளை பற்றிய கதையில் இந்த சீரியல் உருவாகிவருவதாக தெரிந்தது. இந்த் சீரியலுக்கு லட்சுமி மெஸ் (Laxmi Mess) என டைட்டில் வைக்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவந்தது. இந்நிலையில், இந்த புது சீரியலுக்கு “ஒண்ணா இருக்க கத்துக்கணும்” (Onna Irukka Kaththukanum) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம்.
இதில் பல பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் நிலையில், தற்போது இப்படத்தின் மெயின் கதாநாயகியாக வைஷு சுந்தர் (Vaishu Sundar) நடித்துவருகிறார். இவர் ராஜா ராணி சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற சீரியலின் புது புரோமோவை வெளியிட்டுள்ளனர்.




இதையும் படிங்க: மகாநதி சீரியலில் லாஸ்ட் டே ஷூட்டிங்.. எமோஷனலாக கண்ணீர்விட்ட நடிகர்கள் – வீடியோ இதோ!
ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
View this post on Instagram
ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல் நடிகர்கள் :
இந்த சீரியலில் ஸ்டாலின் மற்றும் நிரோஷா இருவரும் முக்கியமான வேடத்தில் நடித்துவரும் நிலையில், அவர்களுடன் நடிகை வைஷு சுந்தர், வசந்த், சங்கரேஷ், மகேஷ் மற்றும் அஜித் போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த சீரியலானது ஒரு மிடில்கிளாஸ் பேமிலி நடத்தும் ஹோட்டல் குறித்த கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம்.
இதையும் படிங்க: ஸ்ரீலீலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷின் D55 படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!
இதில் நடிகர் ஸ்டாலின் ஹோட்டலின் உரிமையாளராக மிகவும் கொஞ்சமான நபராக நடித்துவருகிறார். மேலும் அவருடன் நிரோஷாவும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த ஹோட்டல் வைத்திருக்கும் குடும்பத்திற்கு மருமகளாக வரும் வைஷு சுந்தர் இந்த குடும்பத்தை எவ்வாறு சமாளித்து வாழ்கிறார் என்பது போன்ற கதையில் இந்த சீரியல் உருவாகிவருகிறதும்.
ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல் எப்போது வெளியாகும் :
இந்த சீரியலானது சிறப்பாக உருவாகிவரும் நிலையில், இன்னும் இதன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படவில்லை. விஜய் டிவியில் மகாநதி சீரியலானது முடிவுக்குவந்த நிலையில், அந்த சீரியலின் நிறைவுக்கு பின் இந்த சீரியல் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் 2026ம் ஜூன் இறுதியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.