மகாநதி சீரியலில் லாஸ்ட் டே ஷூட்டிங்.. எமோஷனலாக கண்ணீர்விட்ட நடிகர்கள் – வீடியோ இதோ!
Mahanadhi Serial Ending: தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஒளிபரப்பாகிவந்த சீரியல்தான் மகாநதி. இந்த சீரியலானது சுவாரஸ்ய திருப்பங்களுடன் வெளியாகிவந்த நிலையில், முடிவிற்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கில் ரசிகர்கள் அழுதது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் (Vijay TV) பிரபலமிக்க சீரியல்களில் ஒன்றாக இருந்திவந்ததுதான் மகாநதி (Mahanadhi ). இந்த சீரியலானது கடந்த 2023ம் ஆண்டில் ஒளிபரப்பாகி தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்தது. இந்த சீரியலானது சகோதரிகளின் கதையில் தொடங்கி, கணவன் மனைவியின் கதையாக ஒளிபரப்பாகிவந்தது. இந்த சீரியலில் நடிகர்கள் லட்சுமி பிரியா (Lakshmi Priya), ஸ்வாமிநாதன் அனந்தராமன் (Swaminathan Anantharaman), பிரதீபா, சுஜிதா சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவந்தனர். இந்த சீரியலானது வெற்றிகரமாக 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகிவந்த நிலையில், தற்போது முடிவிற்கு வரவுள்ளது. இந்த சீரியலை பிரவீன் பென்னட் (Praveen Bennett) இயக்க, குளோபல் வில்லேஜர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்துவந்தது.
சகோதரிகளில் கதையாக இந்த் சீரியல் அக்கா மற்றும் தங்கைகளின் கதையாக இந்த சீரியல் தொடங்கி, பின் கணவன் மனைவிகளின் கதை கொண்ட சீரியலாக ஒளிபரப்பாகிவந்தது. இந்த சீரியல் விரைவில் நிறைவுபெறுகிறதாம். இந்நிலையில் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகர்கள் கண்ணீர்விட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரஜினிகாந்தின் பெயரை எந்த அமைப்பு பயன்படுத்தக்கூடாது – ரசிகர் மன்றம் அறிவிப்பு!
மகாநதி சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு:
View this post on Instagram
விஜய் டிவியில் தினமும் மலாய் 6 மணியளவில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் மகாநதி. இதில் நடிகை லட்சுமி பிரியா (காவேரி) மற்றும் நடிகர் ஸ்வாமிநாதன் அனந்தராமன் (விஜய்) இருவரை மையமாக கொண்ட கதைக்களத்தில் வெளியாகிவந்தது. இந்த சீரியலானது இதுவரை கிட்டத்தட்ட 870 எபிசோடுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சீரியலின் நிறைவடையப்போகிறது.
இதையும் படிங்க: திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது ஓ…! சுகுமாரி படத்தின் டீசர்
இந்நிலையில் இதன் கடைசிநாள ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் இறுதியாக கேக் வெட்டியுள்ளார். அப்போது அதில் நடிகை லட்சுமி பிரிய மற்றும் உடனிருந்த நடிகர்களும் கண்கலங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்திலும், மகாநதி சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் வரும் புது சீரியல்:
மகாநதி சீரியல் நிறைவடைந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் புது சீரியல் ஒன்று வெளியாகவுள்ளதாம். இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் ஸ்டாலின் மற்றும் நிரோஷா இணைந்து நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு லட்சுமி மெஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த சீரியல் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.