AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பல நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கும் பாரதி கண்ணம்மா புகழ் அருண்? அட இந்த சீரியலா?

Bharathi Kannamma fame Arun New Serial: விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி என்ற வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் அருண். இவர் நீண்ட நாட்களாக எந்த சீரியலிலும் ஒப்பந்தமாகமல் இருந்த நிலையில், மீண்டும் புதிய சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கும் பாரதி கண்ணம்மா புகழ் அருண்? அட இந்த சீரியலா?
பாரதி கண்ணம்மா புகழ் அருண்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jun 2026 21:32 PM IST

தமிழில் விஜய் டிவியில் (Vijay Tv) பாரதி கண்ணம்மா (Bharathi Kannama) என்ற சீரியல் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்துவந்தது. இந்த சீரியலில் நடித்து அனைவரின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அருண் (Arun). இவர் சினிமாவில் சில குறிப்பிட்ட படங்களில் நடித்துள்ளார். எடுத்துக்காட்டாக இயக்குநர் ரத்னகுமார் இயக்கியிருந்த மேயாத மான் படத்தில் (Meyadha Maan), நடிகர் வைபவின் நண்பனாக அருண் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்கும் பிரபலம் கிடைத்திருந்தது. இதைத்தடுக்க தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் அருண் நடித்துவந்தார். பாரதி கண்ணம்மா சீரியலை முடித்த அருண், கடந்த 2024- 2025ம் ஆண்டில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் (Bigg Boss Season 8) போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். இந்த போட்டியில் கிட்டத்தட்ட 97 நாட்களுக்கு பிறகு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இவர் பெரிதாக சீரியல்களில் நடிக்கவில்லை என கூறலாம். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக காத்திருக்கும் புது சீரியலில் இவர் நடித்துவருகிறாராம். இந்த சீரியலானது கிட்டத்தட்ட ஆபிஸ் சீரியல் போலவே உருவாகிவருவதாக கூறப்படுகிறது. அது இல் காதல் காதல் காதல் (Kadhal Kadhal Kadhal) என்ற புது சீரியல்தான்.

இதையும் படிங்க: 29 படத்தின் டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் வீடியோ

காதல் காதல் காதல் சீரியலில் அருண் நடிப்பது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

காதல் காதல் காதல் சீரியலில் நடிக்கும் அருண்:

இந்த காதல் காதல் காதல் சீரியலானது மூன்று காதலின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வரும் சீரியலாம். இந்த சீரியலானது ட்ரையாங்கில் லவ் ஸ்டோரியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இந்த சீரியலில் வரும் இரண்டாவது காதல் ஜோடியின் ஹீரோவாக அருண் நடிக்கிறாராம். இதில் அவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் வெளியாகிவந்த அண்ணா சீரியல் புகழ் நடிகை சுசித்ரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் இந்த சீரியல் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துவருகிறது.

இதையும் படிங்க: டியூட் 2 படமானது உருவாகுமா? – இயக்குநர் கீர்த்திஸ்வரன் கொடுத்த அப்டேட்!

இந்த சீரியல் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த சீரியல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுவருவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. இந்த சீரியலில் முதல் ஜோடியாக அறிமுக நடிகர் மற்றும் ஜீ தமிழ் பிரபல நடிகையும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீரியல் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us