ஒரு நல்ல ஃபீல் குட் படம் பாக்கனுமா? இந்த சுகமானோ சுகமனு என்ற மலையாள படத்தை மிஸ் செய்யாதீர்கள்
Sukhamano Sukhamanu Malayalam Movie OTT Update | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் மேத்யூ தாமஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற சுகமானோ சுகமனு என்ற படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கும்பளங்கி நைட்ஸ். இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் மேத்யூ தாமஸ். அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் கடைசி தம்பியாக மேத்யூ தாமஸ் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் அடுத்தடுத்து பலப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றார். அதன்படி தண்ணீர் மதன் தினங்கள், அஞ்சாம் பாத்திரா, ஆப்ரேஷன் ஜாவா, ஒன், ஜோ அண்ட் ஜோ என பல ஹிட் படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் மேத்யூ தாமஸ் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சினிமாவிலு அவ்வபோது நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சுகமானோ சுகமனு படம். இந்தப் படத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் மேத்யூ தாமஸ், சஞ்சய், ஜெகதீஷ், ஸ்படிகம் ஜார்ஜ், குடசநாடு கனகம், நோபி மார்கோஸ், அபின் பினோ, அகில் காவலயூர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இயக்குநர் அருண்லால் ராமச்சந்திரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஃபேண்டசி காமெடி பாணியில் வெளியாகி உள்ள இந்தப் படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மேத்யூ தாமஸின் சுகமானோ சுகமனு படம் எப்படி இருக்கு?
சிறு வயதில் இருந்தே தாய் தந்தை இல்லாமல் வளர்ந்த மேத்யூ தாமஸ் மற்றவர்களிடம் பழகுவதை கூட தவிர்த்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் ஓட்டுநராக வேலை செய்துகொண்டு இருந்த இடத்தில் வேலையையும் இழக்கிறார். தொடர்ந்து ஊர் மக்களால் மெண்டல் என்று அழைக்கப்படும் இவர் எதிர்பாரத விதமாக ஒரு துக்க வீட்டிற்கு செல்கிறார். அங்கு உயிரிழந்த நபர் மேத்யூவின் கண்களுக்கு தெரிகிறார்.
இதனைத் தொடர்ந்து சுடுகாட்டில் வண்டி ஓட்டும் வேலையை கிடைக்கிறது. அப்போது அங்கு உயிரிழந்தவர்களில் உடல்களை கொண்டு செல்லும் போது அந்த ஆத்மாக்கள் அனைத்தும் மேத்யூ தாமஸ் உடன் வாழ்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அவரின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறியது என்பதை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி உள்ளது. படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சோகத்தில் திரை உலகினர்..