இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சோகத்தில் திரை உலகினர்..
கடந்த சில மாதங்களாக அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினரின் கவனிப்பிலும் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பிலும் இருந்த அவர், உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் அவ்வப்போது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 10, 2026: தமிழ் சினிமாவில் “இயக்குனர் இமயம்” என போற்றப்பட்ட புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த சில மாதங்களாக தீவிர உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி வெளியாகியதும் தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் சோகமும் நிலவுகிறது.
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா:
சமீப காலமாகவே பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக, சில வாரங்களுக்கு முன்பு வெளியான அவரது காணொளியில், மிகவும் உடல் மெலிந்து, பழைய தோற்றத்தை விட முற்றிலும் மாறிய நிலையில் அவர் காணப்பட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து, அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர்.
மேலும் படிக்க: சிறுத்தை சிவா சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன தனுஷ்? வைரலாகும் தகவல்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்:
கடந்த சில மாதங்களாக அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினரின் கவனிப்பிலும் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பிலும் இருந்த அவர், உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் அவ்வப்போது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராதிராஜாவின் படைப்புகள்:
தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை புதிய கோணத்தில் சொல்லிய மிகப்பெரிய படைப்பாளிகளில் ஒருவராக பாரதிராஜா கருதப்படுகிறார். 1977ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணியையே மாற்றியமைத்தவர் என்று கூறப்படுகிறார். நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், கிராமத்தின் மண்வாசனையை திரைத்திரையில் கொண்டு வந்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.
“கிழக்கே போகும் ரயில்”, “அலைகள் ஓய்வதில்லை”, “முதல் மரியாதை”, “கருத்தம்மா”, “மண் வாசனை”, “சிகப்பு ரோஜாக்கள்” உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன.
மேலும் படிக்க: சிக்மா ஸ்டைல் பாடலின் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு
திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆறு தேசிய விருதுகள், பல மாநில விருதுகள் மற்றும் திரைப்பட விருதுகளை பெற்றுள்ள அவர், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதாலும் கௌரவிக்கப்பட்டார்.
இயக்குனராக மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக பல திரைப்படங்களில் முக்கிய மற்றும் சிறப்பு கதாபாத்திரங்களிலும் நடித்தார். தனது தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். வயது முதிர்ந்த பின்னரும் சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து திரைப்படங்களில் செயல்பட்டு வந்தார்.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா:
கடந்த சில மாதங்களாக மலேசியாவில் வசித்து வந்த தனது மகள் வீட்டில் பாரதிராஜா தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சென்னை திரும்பிய அவர், கடந்த டிசம்பர் மாத இறுதியில் கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குறிப்பாக கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்:
பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியாகியதும் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து, தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து வருகின்றனர். பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. தனது திரைப்படங்கள் மூலம் பல தலைமுறைகளின் மனதில் அழியாத இடம் பிடித்த அவர், என்றும் தமிழ் ரசிகர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.