சிறுத்தை சிவா சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன தனுஷ்? வைரலாகும் தகவல்
Dhanush Next Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தற்போது தனது 55-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி சினிமா வட்டாரங்களில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கர. க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது 55-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி வைத்தார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்று ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அதில் நடிகர் மம்முட்டி தனது போர்ஷனை முடித்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.
மேலும் இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56-வது படத்திற்காக இணைய உள்ளார். அந்தப் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.




சிறுத்தை சிவா சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன தனுஷ்?
தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் வரிசையாக பல இயக்குநர்களுடன் பணியாற்ற உள்ளார். தற்போது அந்த வரிசையில் இயக்குநர் சிறுத்தை சிவாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ‘சிறுத்தை’ சிவா விவரித்த கிராமப்புறப் பின்னணியிலான கதைக்களம் தனுஷை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கதையைக் கேட்ட பிறகு, தனது தற்போதைய படப்பிடிப்புப் பணிகளை முடிக்கும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு தனுஷ் சிவாவைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. கிராமப்புறப் பின்னணியில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான மாஸ் அம்சங்களைக் கொண்ட இந்தக் கதைக்களம் அவரை ஈர்த்துள்ளது; எனவே, 2027-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இப்படத்திற்காகத் தேதிகளை ஒதுக்க அவர் தற்காலிகமாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read… தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த மாதம் டி 55 படத்திலிருந்து வெளியாகும் முக்கிய அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
– #Dhanush is said to be highly impressed with a rural based script narrated by #SiruthaiSiva.
– Following the narration, Dhanush reportedly requested Siva to hold the project until he completes his existing commitments.
– The actor was particularly drawn to the script’s mass… pic.twitter.com/Nv13FV32eu
— Movie Tamil (@_MovieTamil) June 9, 2026
Also Read… Nooru Saami: என்ன ஆனாலும் அம்மா அம்மாதான்.. எமோஷனலான நூறு சாமி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!