AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Nooru Saami: என்ன ஆனாலும் அம்மா அம்மாதான்.. எமோஷனலான நூறு சாமி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

Nooru Saami Film Trailer: இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் கூட்டணியில் எமோஷனல் மற்றும் அம்மாவின் பாசம் குறித்த கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் நூறு சாமி. இப்படமானது வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இன்று (08/06/2026) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Nooru Saami: என்ன ஆனாலும் அம்மா அம்மாதான்.. எமோஷனலான நூறு சாமி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
நூறு சாமி திரைப்பட ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Jun 2026 17:21 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் தயரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவரும் நிலையில், இவரின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள எமோஷனல் திரைப்படம்தான் நூறு சாமி (Nooru Saami). இப்படத்தை இயக்குநர் சசி (Director Sasi) இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசியின் கூட்டணியில் ஏற்கனவே பிச்சைக்காரன் என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது எதிர்பாராத வெற்றியை கொடுத்த நிலையில், மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள படம் நூறு சாமி. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாசிகா (Swasika) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் லிஜோமோல் ஜோஸ் (Lijomol Jose), காவ்யா அனில், அஜய் திஷன், கருணாஸ் மற்றும் முனிஷ்காந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முற்றிலும் அம்மாவின் பாசம் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் இப்படம் தயார்க்கியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை இன்று (08/06/2026), நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: என்னால் முடிந்தவரை.. தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்பேன் – அஜித் குமார்!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகாவின் நூறு சாமி படத்தின் ட்ரெய்லர் குறித்த பதிவு:

நூறு சாமி திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இப்படமானது உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் தனது கணவனை இழந்த பெண் ஒருவர், தனது குழந்தையை வளர்க்கப்படும் கஷ்டங்கள் மற்றும் அவர் சந்திக்கும் இன்னல்களை பன்றியை கதையில் உருவாகியுள்ளது இந்த நூறு சாமி படம். இதில் ஸ்வாசிகா தனது நடிப்பின்முலம் அசத்தியுள்ளார். கணவனை இழந்த பெண், மகன்களின் வளர்ப்பிற்காக கஷ்டம். 40 வயதிற்கு பிறகு மீண்டும் ஹீரோ விஜய் ஆண்டனியின் மீது மலரும் காதல் என ஒரு தாயான பெண்ணின் உள்ளுணர்வை கூறும் படமாக இது அமைத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா!

நூறு சாமி திரைப்படமானது அம்மாவின் பாசம் குறித்த எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. என்னதான் இப்படத்தின் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடித்திருந்தாலும், ஸ்வாசிகாவின் கதாபாத்திரமே அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் மெயின் ரோலில் ஸ்வாசிகாதான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு பின் அம்மாவை பற்றிய ஒரு எமோஷனல் மற்றும் கிராமத்து பின்னணி கதையாக நூறு சாமி படமானது தயாராகியுள்ளது. இப்படம் 2026 ஜூன் 19ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகின்ற நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us