Samantha: மா இன்டி பங்காரம் படத்தில் உண்மையிலே அவர்தான் நடிக்கவேண்டியது.. சமந்தாவே பகிர்ந்த விஷயம்!
Maa Inti Bangaaram Movie: தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவருபவர் சமந்தா. இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம் மா இன்டி பங்காரம். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் பேசிய சமந்தா, மா இன்டி பங்காரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான மற்றும் மோட்டிவேஷன் நடிகையாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எந்த படங்களும் வெளியாகவில்லை என்ற நிலையில், 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram). இப்படத்தில் சமந்தா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடிக்க, இதை இயக்குநர் நந்தினி ரெட்டி (Nadhini Reddy) இயக்கியுள்ளார். இந்த மா இன்டி பங்காரம் படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் பேமிலி டிராமா கதைகளத்த்தில் தயாராகியுள்ளது. இதில் நடிகை கௌதமியும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மா இன்டி பங்காரம் படத்தை நடிகை சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சமந்தா சிறப்பா பதிலை கொடுத்துள்ளார். இந்த மா இன்டி பங்காரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை சாய் பல்லவிதான் (Sai Pallavi).




இதையும் படிங்க: நோ ஷாருக்கான்… நோ ஹ்ரித்திக் ரோஷன்… கேமியோவில் புது முடிவு எடுத்த ஜெயிலர் 2 படக்குழு!
மா இன்டி பங்காரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை குறித்து சமந்தா பகிர்ந்த விஷயம்:
இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம், “மா இன்டி பங்காரம் படத்தில் நீங்கள் நடிக்க என்ன காரணம்” என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, “உண்மையை சொல்லப்போனால் சாய் பல்லவி அவர்களே இந்த படத்தில் நடித்திருக்கவேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து மற்ற திரைப்படங்களில் பிசியாக இருப்பதால் இப்படம் எனக்கு வந்தது. எனக்காக இந்த படத்தின் கதையில் மாற்றங்களை செய்திருந்தார்கள். நிச்சயம் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்” என நினைக்கிறேன் என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்து மற்றும் முஸ்லீம் என இரு முறைப்படி கிரஹப்பிரவேசத்தை நடத்திய தொகுப்பாளினி மணிமேகலை!
மா இன்டி பங்காரம் திரைப்படம் குறித்து சமந்தா பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
మా ఇంటి బంగారం @Sai_Pallavi92 గారు చేయాల్సిన చిత్రం.. వారు ఇతర సినిమాలతో బిజీగా ఉండటం వల్ల కధను నాకు తగ్గటుగా మార్పులు చేసి రూపొందించారు : సమంత @Samanthaprabhu2 #Samantha#Saipallavi #MaaIntiBangaram pic.twitter.com/zsx11qYrto
— SZN (@Suzenbabu) June 6, 2026
இந்த மா இன்டி பங்காராம் படத்தில் நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருக்கும் ஒரு ஆக்ஷன் பெண்ணின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக ஆக்ஷன் நாயகியாக உருவெடுக்கிறார்?, என்ன காரணம் என்பதே இப்படத்தின் மைய கதையாக தயாராகியுள்ளது. இப்படம் 2026 ஜூன் 19ம் தேதியில் தெலுங்கு மொழியில் வெளியாக தயார்க்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.