Nooru Saami: விஜய் ஆண்டனி – ஸ்வாசிகாவின் ‘நூறு சாமி’ படம்.. ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு!
Nooru Saami Trailer Release Update: நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசியின் கூட்டணியில் 2வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம்தான் நூறு சாமி. அம்மாவை பற்றி எமோஷனல் மற்றும் கிராமப்புற கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் இயக்குநர் சசியின் (Director Sasi) இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியை (Vijay Antony) வைத்து பிச்சைக்காரன் என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக இந்த கூட்டணி இரண்டாவதாக இணைந்துள்ள புதிய படம்தான் நூறு சாமி (Nooru Saami). இதை இயக்குநர் சசி இயக்க, விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகா (Swasika) இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமானது விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவாகிவரும் நிலையில், அவரின் மருமகன் அஜய் திஷனும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது முழுக்க முழுக்க அம்மாவை பற்றிய கதைக்களம் கொண்ட படமாக தயாராகியுள்ளது.
விஜய் ஆண்டனியை விடவும் ஸ்வாசிகவின் கதாபாத்திரமே இப்படத்தில் அதிகமாக உள்ளதாம். இந்த படமானது வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நூறு சாமி பட ட்ரெய்லர் வரும் 2026 ஜூன் 08ம் தேதியில் 08ம் தேதியில் வெளியாகவுள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: எனக்கு என்னிடம் அந்த விஷயம் ரொம்பவே பிடிக்கும்.. அதுவே எனது பலம் – பூஜா ஹெக்டே!
நூறு சாமி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:
A journey carrying the love, pain, sacrifice, and unanswered emotions of an ‘Amma’ is ready to unfold.💫#Noorusami | #VandaDevullu Trailer from June 08!#NoorusamiFromJune19#VandaDevulluFromJune19
A #FamilyBiopic.@vijayantony #Sasi @vijayantonyfilm #Swasika @AJDhishan990 pic.twitter.com/MyjQai1NIy
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) June 6, 2026
விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தில் நடிகர்கள் ஸ்வாசிகா, விஜிமோல் ஜோஸ், அஜய் திஷன். கருணாஸ், காவ்யா அனில் மற்றும் முனீஸ்காந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் கிராமத்தில் தந்தையை இலஙக குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்க்கும் ஒரு தாயின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்வாசிகாதான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நோ ஷாருக்கான்… நோ ஹ்ரித்திக் ரோஷன்… கேமியோவில் புது முடிவு எடுத்த ஜெயிலர் 2 படக்குழு!
இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஜூன் 19ம் தேதியில், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு இப்படத்தின் புரோமோஷன் பணிகளும் சிறப்பாக தொடங்கியுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி, முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படம் ஜூன் 19ம் தேதியில் வெளியாகவிருந்தால், நிச்சயம் நூறு சாமி படத்தின் ரிலீஸை ஒத்திவைப்பேன் என பேசியுள்ளார். இது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் நூறு சாமி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.