AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிச்சைக்காரன் படம் போல நூறு சாமி படமும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குநர் சசி!

Director Sasi About Nooru Saami Movie: இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் கூட்டணியில் 2வது உருவாகியுள்ள திரைப்படம்தான் நூறு சாமி. இப்படம் ஒரு தாயை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம், பிச்சைக்காரன் படத்தை போலவே ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என இயக்குநர் சசி தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன் படம் போல நூறு சாமி படமும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குநர் சசி!
நூறு சாமி படம் பற்றி இயக்குநர் சசிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Jun 2026 15:45 PM IST

நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் ஆண்டிற்கு குறைந்தது, இரு திரைப்படங்கள் வெளியாகுவது வழக்கமே. அந்த வகையில் இவரின் நடிப்பில், 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் நூறு சாமி (Nooru Saami). இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை ஸ்வாசிகா (Swasika) மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி இருந்தாலும், அவரைவிடவும் நடிகை ஸ்வாசிகாவின் காட்சிகளே இப்படத்தில் அதிகமாக உள்ளதாம். இப்படத்தை இயக்குநர் சசி (Director Sasi) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணியில் இரண்டாவது படமாக நூறு சாமி படமானது தயார்க்கியுள்ளது. இப்படம் வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் சசி, நூறு சாமி படம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: சேயோன் படத்தின் முதல் பாடலின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு – வைரலாகும் தகவல்

நூறு சாமி படம் குறித்து இயக்குநர் சசி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்:

அந்த நேர்காணலில் இயக்குநர் சசி, “பிச்சைக்காரன் பட வெற்றியால், நூறு சாமி படத்தின் மீது மக்களுக்குப் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. அந்த எதிர்பார்ப்புகளைக் கண்டு நாங்கள் பயப்படுகிறோமா? நிச்சயமாக இல்லை. பிச்சைக்காரன் படமானது பார்வையாளர்கள் மீது ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது போலவே, நூறு சாமியும் அதே போன்ற தாக்கத்தை உருவாக்கும். ஆனால், இது முற்றிலும் வேறுபட்ட வகையைச் சேர்ந்தது மற்றும் வேறுபட்ட முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: அரசன் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ

இந்தப் படத்தில் ஸ்வாசிகாவை விட, விஜய் ஆண்டனிக்கு குறைவான திரை நேரமே உள்ளது. அப்படியிருந்தும், விஜய் ஆண்டனி, “நான் இந்தப் படத்தில் நடிக்க விரும்புகிறேன், மேலும் இதைத் தயாரிக்கவும் விரும்புகிறேன்” என்று கூறினார். இது அவர் கதையை எவ்வளவு நேசித்தார் என்பது பற்றியது” என அவர் தெரிவித்துள்ளார்.

நூறு சாமி திரைப்படம் குறித்து இயக்குநர் சசி பேசியது தொடர்பான பதிவு:

இந்த நூறு சாமி படமானது 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகிவரும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் வரும் 2026 ஜூன் 10ம் தேதி அல்லது 11ம் தேதியில் வெளியாக வாய்ப்புள்ளத்தக்க கூறப்படுகிறது.

Follow Us