AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ

Arasan Movie Update Is Viral On Social Media | தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அரசன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசன் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2026 13:55 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் படங்கள் வெளியானாலும் சரி வெளியாகவில்லை என்றாலும் சரி ரசிகர்களிடையே எப்போது புகழ் பெற்றவராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவர் இறுதியாக நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து இருந்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அந்த தக் லைஃப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் நடிகர் சிலம்பரசனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது நடிப்பை மக்கள் பாராட்டியும் வந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் தனது அடுத்தப் படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்தார்.

தமிழ் சினிமாவில் சிலம்பரசனின் போட்டி நடிகராக கருதப்படும் தனுஷின் ஆதர்சன இயக்குநர் வெற்றிமாறன் சிம்புவுடன் கூட்டணி வைத்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் இந்தப் படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு அளித்த பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசனுக்காக கோவில்பட்டியை சென்னைக்கு கொண்டுவந்த படக்குழு:

அதன்படி தயாரிப்பாளர் தாணு பேசியதாவது, அரசன் படம் குறித்த எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இயக்குநர் வெற்றிமாரன் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஆரம்பத்தில் கோவில்பட்டியில் ஒரு பிரம்மாண்டமான அரங்கம் (set) அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் வெப்பம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக, நாங்கள் அந்த அரங்கத்தை ஈசிஆர் ஃபிலிம் சிட்டிக்கு மாற்றினோம். அங்கு கோவில்பட்டி பகுதியே அப்படியே மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் இயல்பாக இருக்கும்; ஒரு படப்பிடிப்பு அரங்கம் என்ற உணர்வே ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சினிமாவில் புது அவதாரம் எடுக்கும் ஆர்யா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் தயாரிப்பாளர் தாணு பேச்சு:

Also Read… Kajal Aggarwal: காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியானது!

Follow Us