AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் தளபதி விஜய் முதலமைச்சராக வெற்றி பெற்றது வித்தியாசமானது – பவன் கல்யாண் பேச்சு!

Pawan Kalyan About CM Vijay: தெலுங்கு சினிமாவிலும், அரசியலிலும் மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் பவன் கல்யாண். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர், தமிழகத்தில் அரசியல் மற்றும் தளபதி விஜய் முதலமைச்சராக வெற்றிபெற்றது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் தளபதி விஜய் முதலமைச்சராக வெற்றி பெற்றது வித்தியாசமானது – பவன் கல்யாண் பேச்சு!
முதல்வர் விஜய் மற்றும் பவன் கல்யாண்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Jun 2026 15:03 PM IST

தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மிகவும் பிரபலமானவர் பவன் கல்யாண் (Pawan Kalyan). இவர் சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில், கடந்த 2007ம் ஆண்டிலிருந்து ஆந்திராவில் அரசியல்வாதியாகவும் இருந்துவருகிறார். தற்போது இவர் ஆந்திர துணை முதல்வராக (Deputy Chief Minister of Andhra Pradesh) இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் உஸ்தாத் பகத் சிங் (Ustaad Bhagat Singh). இப்படம் கடந்த 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவர் தற்போது, இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் புதிய படத்தில் நாயகனாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், தளபதி விஜய் முதல்வராக (CM Thalapathy Vijay) வெற்றிபெற்றது பற்றியும், தமிழகத்தில் இருக்கும் சாதியில்லா அரசியல் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் தளபதி விஜயை பாராட்டி பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஜன நாயகன் குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் – வைரலாகும் தகவல்

தளபதி விஜய் முதல்வராக ஆனது குறித்து வெளிப்படையாக பேசிய பவன் கல்யாண்:

அந்த சந்திப்பின்போது பேசிய பவன் கல்யாண், “நான் 2007-ம் ஆண்டிலிருந்து அரசியலில் இருகிறேன். மிகவும் கடினமாக அதற்காக உழைத்திருக்கிறேன். அடிமட்ட பிரச்சனைகளை நான் புரிந்துகொள்கிறேன். ஆந்திர மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் நான் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் தமிழகம் மிகவும் வித்தியாசமானது.

இதையும் படிங்க: சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் படம் ஒத்திவைக்கப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்

தளபதி விஜய் அரசியல் கட்சி இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சராகிவிட்டார். தமிழ்நாட்டில் தளபதி விஜய் முதலமைச்சராக வெற்றி பெற்றது வித்தியாசமானது; அங்கு சாதி அரசியல் இல்லை, மக்கள் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் நிலைமை வேறு” என அதில வர கூறியுள்ளார்.

தமிழக அரசியல் மற்றும் தளபதி விஜய் குறித்து பவன் கல்யாண பேசியது தொடர்பான பதிவு:

தளபதி விஜய் தற்போது தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றிவருகிறார். இவர் தொடர்ந்து சினிமாவில் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் மற்றும் பிரபலங்களை சந்தித்துவருகிறார். தமிழகத்தில் தற்போது புதிய அரசியல் நுழைந்த நிலையில், விரைவில் மக்களுக்கான அரசியல் ஆட்சியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us