அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியை மலையாள நடிகர் மோகன்லால் நேரில் கண்டு ரசித்தார். போட்டி தொடங்குவதற்கு முன், ரசிகர்கள் நிரம்பிய மைதானத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர், “மைதானம் உற்சாகத்தில் அதிர்கிறது. போட்டி தொடங்கும் தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை” எனப் பதிவிட்டிருந்தார்.