AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா பர்த்டே ஸ்பெஷல்… நாளை வெளியாகிறது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ

Viswanath And Sons movie 2nd single promo will be released tomorrow | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இரண்டாவது சிங்கிள் புரோமோ நாளை வெளியாக உள்ளது.

சூர்யா பர்த்டே ஸ்பெஷல்… நாளை வெளியாகிறது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jul 2026 18:22 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே நடிகர் சூர்யா தற்போது தனது 46-வது படத்திற்காக தெலுங்கு சினிமா இயக்குநருடனும் தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமா இயக்குநருடனும் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதிலும் குறிப்பாக சூர்யா 46 படத்திற்கு தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ளார். படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ அப்டேட் இதோ:

அதன்படி இந்த விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் இருந்து பட்டாம்பூச்சி என்ற முதல் சிங்கிள் வெளியானது. தற்போது இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ வருகின்ற 25-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் நாளை நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது சிங்கிளின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட உள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… H Vinoth: செல்லம்-னு தான் பேசுவாங்க.. பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் குறித்து எச்.வினோத்!

விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Hi Movie: அனிருத்தின் குரலில்.. ஹாய் படத்தின் 2வது பாடலின் ரிலீஸ் புரோமோ வெளியானது!

Follow Us