AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Hi Movie: அனிருத்தின் குரலில்.. ஹாய் படத்தின் 2வது பாடலின் ரிலீஸ் புரோமோ வெளியானது!

Rasagulla Song Release Promo : நடிகர் கவின் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் சிறப்பாக உருவாகியுள்ள தியோரைப்படம்தான் ஹாய். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியானது.

Hi Movie: அனிருத்தின் குரலில்.. ஹாய் படத்தின் 2வது பாடலின் ரிலீஸ் புரோமோ வெளியானது!
ரசகுல்லா பாடல் ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 21 Jul 2026 20:26 PM IST

தென்னிந்திய சினிமாகிவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ஹாய் (Hi Movie). இந்த படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் கவின் ராஜ் (Kavin Raj) நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் மாஸ்க். இதை வெற்றிமாறன் தயாரித்திருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் கவினின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் ஹாய்.

எமோஷனல் காதல் மற்றும் பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளராக ஜென் மார்கட்டிங் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் உருவாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலான “ரசகுல்லா” பாடல் (Rasagulla) ரிலீஸ் எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

கவினின் ஹாய் திரைப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது என்பது குறித்து வெளியான பதிவு:

கவினின் ஹாய் படத்தின் 2வது ரசகுல்லா பாடலானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 22ம் தேதியில் வெளியாகவுள்ளதாம். இது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஜென் மார்ட்டின் இசையமைக்க, அனிருத் பாடியுள்ளார். தற்போது வெளியான இந்த புரோமோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறாது.

இதையும் படிங்க: செல்லம்-னு தான் பேசுவாங்க.. பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் குறித்து எச்.வினோத்!

கவினின் ஹாய் திரைப்படத்துடன் மோதும் படம்:

கவினின் ஹாய் திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் வெளியாகும் அதே தேதியில்தான் சூர்யா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது வெளியாகவுள்ளது. கோலிவுட் சினிமாவில் இந்த இரு படங்களுக்கும் மத்தியில் வசூல் ரீதியாகவும் போட்டிகள் நிலவும் என கூறப்படுகிறது. இப்படங்களின் மீது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு அதிகமாகிவருகிறது.

Follow Us