AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Im Game: துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

Im Game first Single Release: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் உச்ச நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் மலையாளத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள படம் ஐஅம் கேம். தற்போது இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Im Game: துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!
ஐம் கேம் திரைப்பட பாடல் ரிலீஸ் அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Jul 2026 18:49 PM IST

மலையாளம் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் மலையாளம் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்ந்து புது படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியாகி வெளியான படம்தான் காந்தா (Kaantha). உண்மை கதைக்களத்தை மையமாக கொண்டு வெளியான இப்படமானது சிறப்பான வரவேற்பை பெற்றது. தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் , கிட்டத்தட்ட 2 ஆண்டுக்கு பின் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம்தான் ஐஅம் கேம் (Im Game). இந்த படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidhayath) இயக்க, துல்கரின் வேஃபேரர் பிலிம்ஸ் (Wayfarer Films) நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

அந்த வகையில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையாமையுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிலம்பரசன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணி படம் கைவிட காரணம் என்ன?- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விளக்கம்!

துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்த பதிவு:

துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும் அவருடன் சம்யுக்தா, மிஷ்கின், கதிர், சாண்டி மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ள்ளனர். இப்படமானது பந்தயம் மற்றும் கேம்ப்ளிங் போன்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் இசையும் உருவாகியுள்ளது.

துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படத்துடன் மோதும் படங்கள்:

இந்த படமானது 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில், இப்படத்துடன் பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: கோழையும் வீரனும் ஒன்னு, வீரமான கோழையும் உண்டு – 9 ஆண்டுகளைக் கடந்தது விக்ரம் வேதா படம்

இப்படத்துடன் பிரித்விராஜ் நடித்துள்ள கலீஃபா திரைப்படம் வெளியாகிறது. அத்துடன் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ள பெத்தலகேம் குடும்ப யூனிட் என்ற படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையில் மலையாளம் சினிமாவில் பெரும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us