AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Im Game Movie: அதிர்ஷ்டத்தை நம்பும் சூதாட்டக்காரன்.. துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படத்தின் கதைகளை இதுவா?

Im Game Movie Plot: தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான மலையாளத்தில் தயாராகியுள்ள படம்தான் ஐஅம் கேம். இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Im Game Movie: அதிர்ஷ்டத்தை நம்பும் சூதாட்டக்காரன்.. துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படத்தின் கதைகளை இதுவா?
ஐஅம் கேம் திரைப்படத்தின் கதைக்களம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 May 2026 08:57 AM IST

தென்னிந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கமான நாயகனாக இருந்துவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தாலும் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் அவரும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடித்துவந்தார். இந்த வரிசையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளத்தில் இவர் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அந்த வகையில் மலையாள இயக்குநர் நஹஸ் ஹிதாயத் (Nahas Hidhayath) இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவந்த புதிய படம்தான் ஐஅம் கேம் (Im Game). இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேல் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இப்படமானது சூதாட்டத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இதில் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) மற்றும் சம்யுக்தா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் வரும் 2026 ஆக்ஸட் 20ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் மைய கதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா இருக்கார்…. விஜய் முதல்வரானதால் சினிமாவில் வெற்றிடமா? ஆர்ஜே பாலாஜி சொன்ன தகவல்

துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படத்தின் கதைக்களம் :

இந்த ஐஅம் கேம் படத்தில் துல்கர் சல்மான் உயிரைவிட அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒரு அச்சமற்ற சூதாட்டக்காரராக இருக்கிறார். தனது உலகத்தையே தலைகீழாக புரட்டிப்போடும் தொடர்ச்சியான மற்றும் வித்தியாமான நிகழ்வில் சிக்கிக்கொள்கிறார். இதில் மறைந்திருக்கும் வேடிக்கைகள், ஆச்சர்யங்கள், அதிரடி மற்றும் சுவாரஸ்ய தருணங்களை கொண்ட ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளதாம். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சினிமாவில் ஏழு முதலமைச்சர்களுடன் பணியாற்றிய ஒரே நடிகை.. அட எந்த நடிகை தெரியுமா?

துல்கர் சல்மானின் ஐஅம் கேம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

இப்படத்தில் துல்கர் சல்மானாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போ முதல் முறையாக இணைந்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பரப்புகள் அதிகமாக உள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் நிலையில், இன்னும் இரு மாதங்கள் மட்டுமே உள்ளது. அந்த வகையில் இதன் ரிலீஸ் தேதி சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், இதையடுத்து தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள், மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us