AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூதாட்டம் கதைக்களத்தில்.. துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

I'm Game Movie Release Update: தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலிஷான நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் சூதாட்ட கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவந்த படம்தான் ஐ அம் கேம். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூதாட்டம் கதைக்களத்தில்.. துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
ஐ அம் கேம் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 May 2026 15:02 PM IST

மலையாள சினிமாவில் சிறப்பான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் மலையாள மொழியை கடந்து, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றிருந்த படம்தான் காந்தா (Kanthaa). இதில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை அடுத்தாக புதிய படங்களில் துல்கர் சல்மான் நடித்துவருகிறார். அந்த விடத்த்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இவர் மலையாளத்தில் நடித்துவரும் படம்தான் ஐ அம் கேம் (I’m Game). இப்படத்தை மலையாள இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidhayath) இயக்க, துல்கர் சல்மானின் வேபாரர் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது.

இந்த படமானது சூதாட்டம் மற்றும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்ட நிலையில், கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கும் மேலாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்திருந்தது. மேலும் சமீபத்தில் இதன் ஷட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்

துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. துல்கர் சல்மான் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளம் சினிமாவில் நடித்துள்ள திரைப்படம் என்ற நிலையில், படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளியாக தயார் செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் இப்படம் 2026 கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படமானது 2026 ஆகஸ்ட் 20ம் தேதியில்,  ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகபரவிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா பர்த்டே ஸ்பெஷல்… புதிய போஸ்டரை வெளியிட்ட ரௌடி ஜனார்தனா படக்குழு

ஐ அம் கேம் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஐ அம் கேம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் மிஷ்கின், வினய் போர்ட், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ஆண்டனி வர்கீஸ் போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் முதல் டீசர் போன்றவை வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us