Karuppu: சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான்.. ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
RJ Balaji Karuppu Update: சூர்யா,ஆர்.ஜே.பாலாஜியின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு. இந்த படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் வெளியீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்யும் விதத்தில், ஆர்.ஜே.பாலாஜி அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்து, தன்னை இயக்குநராக செதுக்கி, தற்போது பெரிய நடிகரின் படத்தை இயக்கியிருப்பவர்தான் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவர் ஏற்கனவே மூக்குத்தி அம்மன் (Mookuthi amman) மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி வெற்றிகண்ட நிலையில், தற்போது 3வது மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியிருக்கும் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே சூர்யா45 (Suriya45) என அறிவிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகிவந்தது. இதில் சூர்யா(Suriya) மற்றும் திரிஷா (Trisha) இருவருமே பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது ஒரு தெய்வீகம் மற்றும் நீதியை மையமாக கொண்ட கமர்ஷியல் திரைப்படமாக தயாராகியுள்ளது.
இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகிவரும் நிலையில், தமிழக அரசியலில் சில குழப்பங்கள் எழுந்துவரும் நிலையில், இப்படத்தின் வெளியீடும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதை மறுக்கும் விதமாகவும், கருப்பு படத்தின் வெளியீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை குறிக்கும் விதத்தில் ஆர்.ஜே.பாலாஜி எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: ராம் சரணின் பெத்தி பட ஷூட்டிங்கை பார்வையிட்ட சிரஞ்சீவி… BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!
கருப்பு திரைப்படம் குறித்து இயக்குநர் ஆ.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
சொன்ன தேதியில சொன்ன சொல்படி
கருப்பன் வருவான் !!! 🔥🔥🔥#Karuppu from May 14.பட்டாசு எடுத்து வைங்க பண்டிகை வரப்போகுது …!!!💥💥💥 pic.twitter.com/cZ8ci31Z0f
— RJ Balaji (@RJ_Balaji) May 8, 2026
இந்த பதிவில் ஆர்.ஜே.பாலாஜி, “சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான். பட்டாசு எடுத்து வைங்க பண்டிகை வரப்போகுது” என அண்ட் பதிவில் கோரியுள்ளார். இதனுடன் சூர்யாவின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் சூர்யாவின் கருப்பு படத்தின் வெளியீட்டில் எந்த பிரச்னையும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிரடி படத்திற்கு கிடைத்த சென்சார் அப்டேட் என்ன தெரியுமா?
கருப்பு படமானது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்துவரும் நிலையில், இன்னும் சில நாட்களில் படம் வெளியாகவுள்ளது. இன்னும் வெறும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள். அந்த வகையில் கருப்பு பட ட்ரெய்லர் வரும் 2026 மே 10ம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை பற்றி அறிவிப்பையும் படக்குழு விரைவில் வெளியிடும் என வட்டாரங்கள் கூறுகிறது.