ராம் சரணின் பெத்தி பட ஷூட்டிங்கை பார்வையிட்ட சிரஞ்சீவி… BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!
Chiranjeevi Visits Ram Charans Peddi Set: தெலுங்கு சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் பிரம்மாண்டமான படமாக தயாராகிவருவதுதான் பெத்தி. இப்படத்தின் ஷூட்டிங்கை நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி பார்வையிட்ட BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
டோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக மெகாஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருபவர் சிரஞ்சீவி (Chiranjeevi). இவர் தெலுங்கு சினிமாவில் எந்த அளவிற்கு பிரபலமோ, அதுபோலவே இவரின் மகனும், நடிகருமான ராம் சரணும் (Ram Charan) சினிமாவில் நாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் பான் இந்திய மல்யுத்த திரைப்படமாக தயாராகிவருவதுதான் பெத்தி (Peddi). இதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Najhvi Kapoor) நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில்,படத்தின் எடிட்டிங் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கான ஷூட்டிங் இறுதியாக நடைபெற்றுவரும் நிலையில், படமானது விரைவில் வெளியாகும் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்த பெத்தி பட ஷூட்டிங்கின்போது நடிகர் சிரஞ்சீவி நேரில் வந்து படப்பிடிப்பை பார்வையிட்ட தருணம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்த அட்ராசிட்டி குறித்த BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.




இதையும் படிங்க: ரத்னகுமார் இயக்கத்தில் மேயாத மான், குலு குலு பாணியில் வரவேற்பைப் பெறுமா 29 படம்? மக்களின் கருத்து இதுதான்
பெத்தி பட ஷூட்டிங்கை சிரஞ்சீவி பார்வையிட்டது குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ:
Here are some fun BTS moments that are close to our heart ❤️
Megastar @KChiruTweets Garu and Maverick director @aryasukku Garu visited the shoot of #Peddi ✨️#PEDDI WORLDWIDE RELEASE IN CINEMAS ON JUNE 4th, with PREMIERES on JUNE 3rd
Trailer announcement soon 💥 pic.twitter.com/2W2aTQyjtd
— PEDDI (@PeddiMovieOffl) May 8, 2026
இயக்குநர் புச்சி பாபு சனாவின் இயக்கத்தில், ராம்சரண் இரண்டாவது முறையாக இணைந்திருந்த படம்தான் பெத்தி. இந்த படமானது மல்யுத்தம் மற்றும் கிராமத்து பொழுதுபோக்கு கதைக்களத்தில் அமைந்துள்ளதாம். இப்படத்திற்காக நடிகர் ராம் சரண் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக மல்யுத்தம் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக சிக்ஸ்பேக்கும் ராம் சரண் வைத்துள்ளாராம். அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: யூத் பட வெற்றி.. சிவகார்த்திகேயனுடன் கொண்டாடிய கென் கருணாஸ் – வைரலாகும் வீடியோ!
இப்படம் ஆரம்பத்தில் மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், ஷூட்டிங் தாமதம் காரணமாக ரிலீஸ் தேடி ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து சமீபத்தில், படக்குழு அறிவித்த தகவலின்படி வரும் 2026 ஜூன் 4ம் தேதியில், இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.