Chiranjeevi: சூர்யாதான் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறார் – புகழ்ந்து பேசிய சிரஞ்சீவி!
Chiranjeevi About Suriyas Free Education Inspiration: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிரஞ்சீவி. இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நடிகர் சூர்யாவை அவர் உத்வேகமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் முதல் தற்போதுவரை உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி (Chiranjeevi). இவர் தமிழில் ரஜினிகாந்த் (Rajinikanth) எப்படியோ அதுபோன்று தெலுங்கு சினிமாவில் இவர் இருந்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் “மன சங்கர வர பிரசாத் காரு” (Mana Shankara Vara Prasad Garu) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்க, சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதியில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இவரின் நடிப்பில் விஸ்வம்பரா என்ற படமானது தயாராகியுள்ளது .
இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் நடிகை திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு ஒரு நேர்காணலில் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பேசிய சிரஞ்சீவி, நடிகர் சூர்யாவைதான் (Suriya) உத்வேகமாக கொண்டுள்ளதாகவும், அவர் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்குவது குறித்து பெருமையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது.. அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்த ஆர்.மாதவன் பதிவு!
சூர்யாவை பெருமையாக நடிகர் சிரஞ்சீவி பேசிய விஷயம்:
அண்ட் நேர்காணலில் சிரஞ்சீவி பேசுகையில், “ரத்த தானம், கண் தானம் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்துவருக்குவதாக மற்றும் மக்கள் தன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், தான இந்த சமூக சேவையை தொடங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட் ஓவர்.. அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்!
மேலும் பேசிய அவர், ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கவேண்டும் என்பது எனது அடுத்த இலக்கு, தரமான கல்வி கிடைத்தால் ஏழை குடும்பங்களின் வாழ்க்கையும் முன்னேறும் என்றார். தொடர்ந்து பேசுகையில், தமிழ் நடிகர் சூர்யா தன்னை முன்மாதிரியாக கொண்டுதானே, அகரம் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை நிறுவியதாகவும், சூர்யாவின் கல்வி சேவைகள் தனக்கு மிகுந்த உத்வேகம் மற்றும் ஊக்கம் அளிப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யா குறித்து சிரஞ்சீவி தெரிவித்தது பற்றி வைரலாகும் பதிவு:
View this post on Instagram
நடிகர் சூர்யா நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் ம்போன்ற பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார். கடந்த 2006ம் ஆண்டு முதல் அகரம் பவுண்டேஷன் என ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கிவரும் நிலையில், இவரின் கல்வி நிலையத்தின் கிழே பல ஆயிரம் மாணவர்கள் படித்து, பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.