AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Chiranjeevi: தனுஷ் துணிச்சலானவர்.. நடிகர் சிரஞ்சீவி பாராட்டு மழை!

Chiranjeevi Praises Dhanush : தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து வருபவர் சிரஞ்சீவி. இவர் சமீபத்தில் நடைபெற்ற குபேரா திரைப்பட வெற்றிவிழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தனுஷின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் அவரை போல் இப்படத்தில் இந்திய நடிகர்கள் யாரும் நடித்திருக்கமுடியாது என மேடையில் தனுசைப் புகழ்ந்துள்ளார்.

Chiranjeevi: தனுஷ் துணிச்சலானவர்.. நடிகர் சிரஞ்சீவி பாராட்டு மழை!
குபேரா படக்குழுவுடன் சிரஞ்சீவி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Jun 2025 13:26 PM IST

டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலாவின் (Sekhar Kammula) இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படத்தில் தமிழ் முன்னணி நடிகர் தனுஷ் (Dhanush) கதாநாயகனாக நடித்துள்ளார். தனுஷின் 51வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த குபேரா திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாகக் கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தேவா  (Deva) என்ற யாசகம் பெறுபவர் வேடத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இணைந்து நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna) மற்றும் ஜிம் ஷார்ப் இணைந்து நடித்திருந்தனர். இந்த குபேரா படமானது தமிழ், தெலுங்கு , இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருந்தது.

திரையரங்குகளில் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று 2025, ஜூன் 22ம் தேதியில் ஹைதராபாத்தில் குபேரா வெற்றிவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் தெலுங்கு பிரபல நடிகை சிரஞ்சீவி (Chiranjeevi)  கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அவர் நடிகர் தனுஷின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார். “குபேரா படத்தில் தேவா கதாபாத்திரத்தை தனுஷை தவிர வேறு எந்த இந்திய நடிகர்களால் துணிச்சலாகச் செய்திருக்க முடியாது” என்று பாராட்டியுள்ளார். இதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

குபேரா திரைப்பட வெற்றி விழா தொடர்பாக படக்குழு வெளியிட பதிவு :

தனுஷை பாராட்டிய சிரஞ்சீவி :

அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி, ” குபேரா படத்தில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம் தேவா, மேலும் இந்த தேவா கதாபாத்திரத்தில் நடிக்கும் துணிச்சல் தனுஷை தவிர வேறு எந்த இந்திய நடிகர்களுக்கும் கிடையாது. என் எனக்குக் கூட இல்லை. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது நிச்சயமாகக் கிடைக்கவேண்டும். அப்படிக் கிடைக்கவில்லை என்றாலே அந்த விருதிற்கு அர்த்தமே இல்லை. மேலும் இந்த குபேரா படத்தில் தனுஷின் நடிப்பு என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது” என நடிகர் சிரஞ்சீவி மேடையில் வெளிப்படையாகத் தனது கருத்தைப் பேசியுள்ளார்.

தற்போது இல்லை தொடர்பான வீடியோ மற்றும் தகவல்கள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் சில ரசிகர்கள் இந்த படத்திற்காக நிச்சயம் தனுஷ் தேசிய விருதை வாங்குவார் என தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us