AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Deverakonda : பழங்குடியினர் குறித்து பேச்சு… விஜய் தேவரகொண்டாவின் மீது வழக்குப் பதிவு!

FIR Registered Against Vijay Deverakonda : தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் ரெட்ரோ படத் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகப் பேசியிருந்தார். அதில் அவர் பழங்குடியினரை ஒப்பிட்டுப் பேசியதாக, ஹைதராபாத் காவல் நிலையத்தில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Vijay Deverakonda : பழங்குடியினர் குறித்து பேச்சு… விஜய் தேவரகொண்டாவின் மீது வழக்குப் பதிவு!
விஜய் தேவரகொண்டாImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Jun 2025 20:10 PM IST

தென்னிந்திய அளவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) . இவர் தமிழ், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவரின் நடிப்பில் கடைசியாக ஃபேமிலி ஸ்டார் (Family Star)  என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமாக கிங்டம் (Kingdom)  படமானது தயாராகியுள்ளது. இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இப்படமானது வரும் 2025, ஜூலை மாதத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் ரெட்ரோ (Retro)  திரைப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யாவுடன், விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி மேடையில் அவர் பஹல்காம் தாக்குதல் (Pahalgam attack) குறித்தும், குஷி படத்தின் படப்பிடிப்பின்போது காஷ்மீரில் (Kashmir), தான் பார்த்தது பற்றியும் பேசியிருந்தார். மேலும் பாகிஸ்தானை மக்களைப் பழங்குடியின மக்களை ஒப்பிட்டு அவர் பேசியதாகச் சர்ச்சை வெடித்திருந்தது.

இது பல நாட்களாக விமர்சனமாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மீது ஹைதராபாத் (Hyderabad), ராய்துர்கம் காவல் நிலையத்தில் எப்ஐஆர் (FIR)  பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பழங்குடியின அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது. தற்போது இது தொடர்பான தகவல்கள் விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ரெட்ரோ ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேச்சு

கடந்த 2025, ஏப்ரல் இறுதியில் நடைபெற்ற சூர்யாவின் ரெட்ரோ படத் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்துப் பேசிய விஜய் தேவரகொண்டா, ‘இந்தியா பாகிஸ்தானைத் தாக்கத் தேவையில்லை. அங்குள்ள மக்கள் வெறுப்படைந்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்புவார்கள். இது 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் செய்ததுபோல நடைபெறும். அவர்கள் புத்திசாலித்தனம் இல்லாமல், சிறிதளவு பொது அறிவும் இல்லாமல் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று அவர் அதில் பேசியிருந்தார். இருப்பினும், பழங்குடியினர் சங்கத் தலைவர் அசோக் குமார் ரத்தோட் இந்தக் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். விஜய் தேவரகொண்டாவின் பேச்சு பழங்குடியினரை அவமதிப்பதாகக் கூறினார்.

பழங்குடியின பேச்சு தொடர்பாக விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

தனது வார்த்தைகளுக்கு எதிர்மறையான கருத்துகளைப் பெற்ற உடனேயே விஜய் தேவரகொண்டாவும் பதிலளித்தார். பழங்குடியினர் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது உண்மைதான், ஆனால் அது பழங்குடியினர் குறித்து தவறாக பேசவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us