AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

41 ஆண்டுகளைக் கடந்தது கமல் ஹாசனின் உயர்ந்த உள்ளம் படம்!

Uyarndha Ullam Movie Completes 41 Years Today | உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படங்களில் உயர்ந்த உள்ள படம் 41 ஆண்டுகளைக் கடந்துள்ளது தற்போது.

41 ஆண்டுகளைக் கடந்தது கமல் ஹாசனின் உயர்ந்த உள்ளம் படம்!
உயர்ந்த உள்ளம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jul 2026 19:28 PM IST

தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் 200-க்கும் அதிகமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டதால் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் உயர்ந்த உள்ளம். இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கி உள்ள நிலையில் படத்தின் கதையை பஞ்சு அருணாசலம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் மு. சரவணன் மற்றும் எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளரான இளையராஜா இசையமைத்து இருந்தார். படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது பாடல்களும்.

41 ஆண்டுகளைக் கடந்தது உயர்ந்த உள்ளம் படம்:

மேலும் இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அம்பிகா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வி.கே.ராமசாமி, ராதா ரவி, ஜனகராஜ், மேஜர் சுந்தர்ராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் கோவை சரளா ஆகியோர் இணைந்து நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 41 ஆண்டுகளைக் கடந்த நிலையில் படக்குழு அதனை கொண்டாடி வருகின்றது.

Also Read… Venky Atluri: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அது உங்களுக்கு கட்டாயம் தெரிந்துவிடும் – இயக்குநர் வெங்கி அட்லூரி!

உயர்ந்த உள்ளம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vetrimaaran: வாடிவாசல் இல்ல.. தமிழ் முருகன் இல்ல.. வெற்றிமாறன் இணையும் அடுத்த படம் இதுவா?

Follow Us