நெருங்கும் தீபாவளி.. அசைவ பிரியர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்.. ஆடு- கோழி இறைச்சி கடும் உயர்வு!
Mutton And Chicken Prices Increased : தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆடு மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வ அசைவ பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் புரட்டாசி மாதம் முடிவடைந்து ஐப்பசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் வழக்கமாக ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.900 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 1200- க்கு விற்பனை செய்யப்படுகிறது புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் ஒரு கிலோ இறைச்சி ரூ. 720 முதல் ரூ. 750 வரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.850 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சிறு வியாபாரிகள் வாங்கி ரூ. 1000- க்கு விற்பனை செய்து வருகின்றனர். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் இதற்கு அதிக விலைக்கு விற்பனை செய்தால் விற்பனை ஆகாது.
ஆட்டு தலைக்கறி முதல் ஈரல் வரை விலை உயர்வு
இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக ஆட்டுத்தலை கறி ரூ. 600, மண்ணீரல் ரூ.300, ஈரல் ரூ. 800 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக சென்னை கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஞான செல்வம் கூறுகையில், புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் கோழிக்கறி பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் விலையும் உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!




கோழி இறைச்சி விலையும் கடுமையாக உயர்வு
கோழி உற்பத்தி குறைக்கப்பட்டு இருப்பதன் காரணமாக தேவையான அளவு கிடைப்பதில்லை. உற்பத்தி செலவு அதிகரிப்பதால் கோழி பண்ணையாளர்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றனர். கறிக்கோழி தட்டுப்பாடு இருப்பதன் காரணமாக சிலர் பதுக்கி இருப்பு வைக்கக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இதன் காரணமாக கோழிக்கறி விலையும் உயர்கிறது. இதே போல, கடந்த வாரம் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 280 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ. 340 முதல் ரூ. 360 வரை உயர்ந்துள்ளது.
தீபாவளியையொட்டி கிலோவுக்கு ரூ. 5 உயர வாய்ப்பு
சென்னைக்கு வரும் கோழிகளின் வரத்து குறைந்து, கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலை முதல் இரவு வரை கிடைத்து வந்த கோழி இறைச்சி, தற்போது மாலையிலேயே தீர்ந்து விடுகிறது. இதனை பயன்படுத்தி சிலர் கோழிகளை பதுக்கி வைப்பதாலும் விலை உயர்வுக்கு காரணமாகிறது. உயிருடன் விற்பனை செய்யப்படும் கறிக்கோழி கிலோ ரூ. 162- ஆக இருக்கும் நிலையில் தீபாவளியை ஒட்டி ரூ. 5 உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: ரூ. 100 கோடி லஞ்ச புகார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி கைது.. இரவில் சிறையில் அடைப்பு?