Sivakarthikeyan: அதை நான் உண்மையிலே செய்தேன்.. விமர்சனங்களை காமெடி செய்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan on Negative Comments: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பேமஸான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், தன்மீது வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக மற்றும் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் அங்கீகாரம் இல்லாத வேடங்களில் நடித்து, தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து மக்களை கவர்ந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இப்படமானது 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில் எதிர்பாராத வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநரின் இயக்கத்தில் சேயோன் (Seyon) என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படமானது மதுரை வட்டாரத்தில் நடைபெறும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Director Ramkumar Balakrishnan) இயக்கத்தில் SK27 என்ற திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார்.
இந்த படம் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தன்னைப்பற்றி வரும் விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் மீம்கள் குறித்து காமெடியாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: எல்லா நேரங்களிலும் நாங்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தோம்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா!
மீம்ஸ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயனிடம் ரசிகர் ஒருவர் “நடிகர்களை அழைத்து பாராட்டுவர் நேநேகள்தான் அதையே நீங்கள் தொடர்ந்து பண்ணிட்டு வாரிங்க.. அதில் வரும் விமர்சனங்கள் பற்றி தெரியுமா? என கேட்டார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “சமீபத்தில் கூட ஒரு வீடியோ வந்தது, நான் ரஜினிகாந்த் சாரை நேரில் அழைத்து வாழ்த்துவதுபோன்று. ஆனால் நான் உண்மையிலே சார்-க்கு போன் பண்ணி படம் பயங்கரமா இருந்துச்சி சார் னு சொன்னேன்.
இதையும் படிங்க: சீன் படத்தின் கதையை சொல்லும்போது சூர்யாவின் ரியாக்ஷன் – இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!
ஒரு ரசிகராக நாம் அதைத்தான் செய்வோம். இந்த விமர்சனங்களை நம் வாழ்க்கையில் ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முகம் தெரியும் நபர்களிடம் இருந்துவரும் பாசிட்டிவ் விமர்சனங்களை எடுத்துக்கொண்டு, முகம் தெரியாதவர்களிடம் வரும் விமர்சனங்களை எடுத்துக்கொண்டால் எப்படி” என அதில் அவர் கூறியுள்ளார்.
விமர்சனங்கள் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
Host: #Sivakarthikeyan anna is always the first to appreciate a small film if it’s good. But even for that, people post negative comments.
#Sivakarthikeyan: Even recently, a video came out of me appreciating Rajini sir’s film.. I called him and said, “Sir, padam bayangarama irundhuchu, sir..” That’s what we can do as a fan. We shouldn’t let comments from unknown people affect us.. https://t.co/Z0nROx8hq9
— Laxmi Kanth (@iammoviebuff007) October 25, 2026
சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனது படங்களுக்கான பணிகளில் பிசியாக இருக்கிறாரா. தற்போது ஒரே நேரத்தில் சேயோன் மற்றும் Sk27 என இரு திரைப்படங்களிலும் நாயகனாக நடித்துவருகிறார். இந்த இரு படங்களுமே வரும் 2027ம் ஆண்டின் கோடைக்காலத்திற்கு பிறகே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.