AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எல்லா நேரங்களிலும் நாங்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தோம்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா!

Rashmika Instagram Post: கன்னட சினிமாவின் மூலமாக அறிமுகமாகி, தற்போது பான் இந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் மற்றும் இவரின் கணவர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ரணபாலி பட ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். இந்த நேர்காணல் மூலம் எழுந்த விமர்சனங்களுக்கு ராஷ்மிகா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எல்லா நேரங்களிலும் நாங்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தோம்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 26 Oct 2026 15:47 PM IST

பான் இந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிவரும் இளம் நடிகையாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ரணபாலி (Ranabaali). இந்த திரைப்படமானது கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) ஜோடியானது கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருந்தது. இந்த படமானது 1960-களில் நடந்த ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் ஆட்சியின் ஒடுக்குமுறையை பற்றிய கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படம் தொடர்பாக பாலிவுட்டில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவருமே நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களின் காதல் மற்றும் திருமணம் குறித்த கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்தனர். இது தொடர்பாக விமர்சனங்கள் இணையத்தில் பரவிவந்த நிலையில், அது குறித்த விமர்சனங்களுக்கு ராஷ்மிகா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சீன் படத்தின் கதையை சொல்லும்போது சூர்யாவின் ரியாக்ஷன் – இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!

தனது காதல் மற்றும் திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு ராஷ்மிகாவின் பதில்:

எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது ஒருபோதும் முன்மொழிவதோ, மண்டியிட்டு முன்மொழிவதோ, அல்லது விரலில் மோதிரம் அணிவிப்பதோ அல்ல. அது வெறும் அலங்காரப் பகுதி. எங்களைப் பொறுத்தவரை, அது ஒன்றாக ஒரு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதைப் பற்றியது.மேலும், இதுவரை நாங்கள் அதை மிக அழகாகச் செய்துள்ளோம் என்று நான் நினைக்கிறேன். ஆம், நான் என் கணவர் மீது அளவுக்கதிகமான காதல் கொண்டிருக்கிறேன். அது எப்போது ஒரு தவறான விஷயமாக மாறியது? நான் திருமணம் செய்யப்போகும் ஆண் மீது காதல் கொள்ளவில்லை என்றால், பிறகு நான் ஏன் அவரைத் திருமணம் செய்ய வேண்டும்? அவர் என் வாழ்நாள் துணைவராக இருக்கப் போகிறார்.

இதையும் படிங்க: 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – சிம்ரன் கூட்டணி… வைரலாகும் தகவல்!

சாதாரண நாட்களிலும் அசாதாரண நாட்களிலும் என் நண்பராக இருக்கப் போகிறார். என் குழந்தைகளின் தந்தையாக இருக்கப் போகிறார். நான் அவருடன் முதுமை அடையும் ஆணாக இருக்கப் போகிறார். நான் அதை ஆயிரம் முறை செய்வேன் – 100 என்பது ஒன்றுமே இல்லை. விஷயம் அவ்வளவு எளிமையானதுதான் என அவர் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கூறியிருக்கிறார்.

விமர்சனங்கள் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு:

அந்த நேர்காணல் பல விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திவந்த நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் பிரியப்போவதாக இணையத்தில் தவறான தகவல்கள் பரவிவந்தது. அந்த விதத்தில் அதையெல்லாம் எதிர்த்து ராஷ்மிகா தனது காதல் மற்றும் அன்பை பற்றி ஆணித்தரமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us