AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

700 கோடியை நோக்கி செல்லும் ஜெயிலர் 2 படத்தின் வசூல்? வைரலாகும் தகவல்

Jailer 2 Movie Box Office Collection Update | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றது.

700 கோடியை நோக்கி செல்லும் ஜெயிலர் 2 படத்தின் வசூல்? வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Oct 2026 14:03 PM IST

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜெயிலர் 2. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது இந்த ஜெயிலர் 2 படம். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் முதல் பாக கதைக்கும் இந்த இரண்டாம் பாக கதைக்கும் அதிக அளவில் வித்யாசம் இருந்ததாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். மேலும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் இன்றி இரண்டாம் பாகத்தில் புதிதாக பல நடிகர்கள் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தைப் போல இந்த இரண்டாம் பாகத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

700 கோடியை நோக்கி செல்லும் ஜெயிலர் 2 படத்தின் வசூல்?

அதன்படி முன்னதாக ஜெயிலர் 2 படம் வெளியான ஒரு வாரத்தில் மொத்தம் ரூபாய் 549 கோடியை கடந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகாலின்படி தற்போது இந்த ஜெயிலர் 2 படம் ரூபாய் 700 கோடி வசூலை நோக்கி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் படக்குழு இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… தர்மன் படத்தில் நயன்தாரா இருப்பதை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் பதிவு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… எக்ஸ் பக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்வி… ஓம் படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட் – வைரலாகும் பதிவு!

Follow Us