வங்க கடலில் சீறும் அர்னாப் புயல்.. பெயர் வைத்தவர் யார்? என்ன அர்த்தம்? முழு விவரம் இதோ!
Arnab Cyclone Named : மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பகுதியில் உருவாகி உள்ள புயலுக்கு அர்னாப் என்ற பெயர் எப்படி வந்தது. அதற்கு பெயர் இட்டது யார் என்ற விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேற்கு- மத்திய வங்காள விரிகுடா பகுதியில் அர்னாப் புயல் வலு பெற்று அக்டோபர் 28- ஆம் தேதி காலை ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய மாநில ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலின் காரணமாக உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஒடிசா அரசு தனது தயார் நிலையை வலுப்படுத்தி வருகிறது. அதே வேளையில் ஆந்திரப் பிரதேச அரசு தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யுமாறு மின்சார நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, உருவாகி உள்ள அர்னாப் புயலுக்கு அதன் பெயர் எப்படி வந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அர்னாப் என்ற பெயரை வங்கதேசம் முன்மொழிந்ததுடன், இது உலக வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசுபிக் பொருளாதார, சமூக ஆணையத்தின் வெப்ப மண்டல சூறாவளிகள் குழு ஆகியவற்றால் கடந்த ஏப்ரல் 2020- ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட வெப்ப மண்டல சூறாவளி பெயர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
சூறாவளி பெயர் பட்டியலில் 13 நாடுகள்
இந்த பட்டியலில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மியான்மர், மாலத்தீவுகள், கத்தார், பாகிஸ்தான், ஓமன், தாய்லாந்து, சவுதி அரேபியா, இலங்கை, யேமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 13 நாடுகள் சமர்ப்பித்த பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடுகளும் 13 பெயர்களை வழங்கியுள்ளதால் அதன் மொத்த எண்ணிக்கை 169 ஆனது. வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலை உள்ளடக்கிய வட இந்திய பெருங்கடலில் வெப்ப மண்டல சூறாவளிகள் உருவாகும் போது இந்த பெயர்கள் வரிசைக்கிரகமாக பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் படிக்க: இலங்கை கடல் பகுதியில் 2 படகுகள் பறிமுதல்.. 7 பேர் அதிரடி கைது.. கடற்படை நடத்திய வேட்டை.. பரபரப்பு பின்னணி!




அர்னாப் பெயர் எதனுடன் தொடர்புடையது
அர்னாப் என்ற பெயர் பொதுவாக கடல் அல்லது பெருங்கடலை குறிக்கும் வங்காள வார்த்தையுடன் தொடர்புடையது. இருப்பினும், அதிகாரப்பூர்வ இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பெயர் பட்டியல், அப்பெயரை முன்மொழிந்த நாட்டையும் அதன் உச்சரிப்பையும் உறுதிப்படுத்தி உள்ளது. வெப்பமண்டல சூறாவளிகளுக்கு பெயரிடுவது தனித்தனி வானிலை அமைப்புகளை மக்கள் அடையாளம் காணவும், அவற்றின் வளர்ச்சியை பற்றி விழிப்புடன் இருக்கவும் உதவுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தை கடக்கும் அர்னாப் புயல்
ஒரே நேரத்தில் பல புயல்கள் ஏற்படும் பட்சத்தில் உருவாகும் குழப்பத்தையும் இது குறைக்கிறது. பெயர்கள், புயல் எச்சரிக்கைகளை நினைவில் கொள்வதையும், தொடர்பு கொள்வதையும் எளிதாக்குவதோடு, அதிகாரிகள் எந்த புயலை குறிப்பிடுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. வரும் அக்டோபர் 28- ஆம் தேதி ஆந்திர பிரதேச கடற்கரையில் அர்னாப் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: போனுக்கு வந்த அந்த ஒரு மெசேஜ்.. PhonePe மூலம் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ்.. தீபாவளி சமயத்தில் இப்படியா!!