AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போனுக்கு வந்த அந்த ஒரு மெசேஜ்.. PhonePe மூலம் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ்.. தீபாவளி சமயத்தில் இப்படியா!!

UPI Scam Alert: சிவகாசியில் பட்டாசு வியாபாரி ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து யூபிஐ (UPI) செயலி மூலம் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் பெரும்பகுதி பணம் தப்பிய நிலையில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போனுக்கு வந்த அந்த ஒரு மெசேஜ்.. PhonePe மூலம் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் அபேஸ்..  தீபாவளி சமயத்தில் இப்படியா!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Oct 2026 08:11 AM IST

விருதுநகர், அக்.26: நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருமளவு அதிகரித்து வரும் அதேவேளையில், பொதுமக்களின் வங்கிக் கணக்குகளைக் குறிவைத்து அரங்கேறும் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு வியாபாரி ஒருவர் தனது செல்போன் மற்றும் யூபிஐ (UPI) செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணப் பரிவர்த்தனை செய்து வந்த நிலையில், சைபர் திருடர்களின் நூதன வலையில் சிக்கி தனது கணக்கில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் நடந்த நடிகர் தனுஷ் நற்பணி இயக்க கூட்டம்.. மகளிருக்கு வெள்ளி விளக்கு பரிசு.. பேசியது என்ன?

அடுத்தடுத்த அதிர்ச்சி குறுஞ்செய்திகள்:

சிவகாசி புதுரோடு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி, இவர் அப்பகுதியில் சொந்தமாகப் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது வங்கிக் கணக்கில் மொத்தம் 4 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் சேமிப்புத் தொகை இருந்த நிலையில், திடீரென இவரது போன் பே (PhonePe) செயலி மூலம் அடுத்தடுத்துப் பணப் பரிவர்த்தனைகள் நடப்பதாகக் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. முதலில் 1,000 ரூபாயும், பின்னர் 5,000 ரூபாயும் தனது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகத் தனது செல்போனைச் சரிபார்க்க முயன்றபோது மொபைல் போன் திடீரெனச் செயலிழந்து (Hang) வேலை செய்யாமல் நின்றுள்ளது. இதற்கிடையே, மேலும் ஒரு லட்சம் ரூபாய் அவரது கணக்கிலிருந்து கழிக்கப்பட்டதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்ததால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளார்.

வங்கிக் கணக்கை முடக்கிய வியாபாரி:

தனது கணக்கில் இருந்து பணம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதை உணர்ந்த வியாபாரி ஆறுமுகசாமி, உடனடியாக உஷாராகித் தனது செல்போனில் இருந்த சிம் கார்டை வெளியில் உருவி எடுப்பதோடு, இணைய இணைப்புகள் மற்றும் கடையிலிருந்த வைஃபை (Wi-Fi) இணைப்புகளையும் உடனடியாகத் துண்டித்தார். ஆனாலும் அதற்குள் சைபர் திருடர்கள் ஒரு லட்சம் ரூபாயை மறித்து எடுத்துவிட்டனர்; மேலும் மற்றொரு போன் மூலம் கூடுதலாக 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயைத் திருட முயன்றபோது, அவர் உடனடியாகத் வங்கியைத் தொடர்புகொண்டு தனது கணக்கை முழுமையாக முடக்கக் கோரியுள்ளார். வங்கி நிர்வாகம் உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு அவரது கணக்கினை முடக்கியதன் காரணமாக, மீதமிருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் திருடப்படாமல் தப்பியது.

இதையும் படிக்க: செஞ்சி 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 2-வது நாளாக பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை! 6 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாடியது ஏன்?

மத்திய பிரதேசத்திலிருந்து இயங்கிய மர்ம கும்பல்:

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி ஆறுமுகசாமி உடனடியாக விருதுநகர் மாவட்டச் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.  புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், திருடப்பட்ட பணம் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சிறு சிறு தொகையாகப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற அதிநவீன இணையவழிப் பண மோசடிகளில் ஈடுபடும் மர்மக் கும்பலைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதோடு, பொதுமக்கள் அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Follow Us