AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காதல் விவகாரத்தில் கோர முடிவு.. காதலியை வெட்டிக்கொன்ற காதலன் செய்த செயல்.. ஓசூர் அருகே பயங்கரம்!

Lover Killed in Hosur: ஓசூர் அருகே காதலித்த பெண்ணைக் கழுத்தறுத்துக் கொன்ற வாலிபர், பின்னர் லாரி பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாகலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் கோர முடிவு.. காதலியை வெட்டிக்கொன்ற காதலன் செய்த செயல்.. ஓசூர் அருகே பயங்கரம்!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Oct 2026 08:55 AM IST

கிருஷ்ணகிரி, அக்டோபர் 26: மனித உறவுகளில் ஏற்பட்டுவரும் அகப்பகைகளும் அவநம்பிக்கைகளும் சில நேரங்களில் கோரமான விபரீத முடிவுகளில் கொண்டு போய் விட்டுவிடுகின்றன. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலித்த பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் லாரி பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் அரங்கேறிய இந்த இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க: ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி ரத்து?.. ஆவின் நிர்வாகம் விளக்கம்!

காதலி கொடூரக் கொலை:

திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (21). இவர் ஓசூர் அருகே உள்ள ஜீமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் வேலை பார்த்து வந்த திவ்யஸ்ரீ என்ற பெண்ணுடன் இவருக்குக் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு திவ்யஸ்ரீயைத் தான் தங்கியிருந்த தனி அறைக்கு அழைத்துச் சென்ற பிரதீப், அங்கு அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாய் தகராறு ஏற்பட்டுள்ளது; இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பிரதீப், அங்கிருந்த ஆயுதத்தால் திவ்யஸ்ரீயைக் கழுத்தறுத்துக் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த திவ்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலை செய்துகொண்ட காதலன்:

காதலியைப் படுகொலை செய்த பிறகு அங்கிருந்து தப்பியோடிய பிரதீப், பாகலூரிலிருந்து ஓசூர் நோக்கி வந்துகொண்டிருந்த லாரிக்கு முன்பாகத் திடீரெனப் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினரின் உதவியோடு மீட்டு வந்த பாகலூர் காவல்துறையினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றிப் பிரதீப்பும் பரிதாபமாக உயிரிழந்தார். காதலித்த பெண்ணைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் இருவரின் குடும்பத்தினரும் கதறி அழுதது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

இதையும் படிக்க: சென்னையில் நடந்த நடிகர் தனுஷ் நற்பணி இயக்க கூட்டம்.. மகளிருக்கு வெள்ளி விளக்கு பரிசு.. பேசியது என்ன?

காவல்துறையின் முதற்கட்ட விசாரணை:

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பாகலூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட திவ்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார், இவர்களுக்கிடையேயான மோதலுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஒரு சில நிமிடத் தகராறில் இரு உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் ஓசூர் ஜீமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us