AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி ரத்து?.. ஆவின் நிர்வாகம் விளக்கம்!

Aavin Paneer, Milk Products Production NOT Stopped | ஆவின் நிர்வாகம் பால் பொருட்களை தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வரும் நிலையில், அவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து ஆவினின் விளக்கத்தை பார்க்கலாம்.

ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி ரத்து?.. ஆவின் நிர்வாகம் விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Oct 2026 08:21 AM IST

சென்னை, அக்டோபர் 26 : அரசின் ஆவின் (Aavin) பாலகத்தில் பனீர் உள்ளிட்ட சுமார் 100 பொருட்களின் விற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, பொருட்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக வெளியான தகவலுக்கு ஆவின் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பொருட்களின் விற்பனை நிறுத்தம் தொடர்பாக ஆவின் அளித்துள்ள விளக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் பொருட்கள்

அரசு ஆவின் நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு சுவையான மற்றும் தரமான பால் சார்ந்த உணவு பொருட்களை வழங்கி வருகிறது. பால், தயிர், நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. அதனை ஏராளமான பொதுமக்கள் தினசரி அடிப்படையில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், அதன் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஆவின் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க : “த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu! விஜய் அரசை கடுமையாக விமர்சித்த மு.க ஸ்டாலின்

உற்பத்தி நிறுத்தம் – ஆவின் விளக்கம்

இது குறித்து கூறியுள்ள ஆவின், ஆவின் நிறுவனத்தில் தயார் செய்யப்படும் எந்த ஒரு பொருட்களின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தம் செய்யப்படவில்லை. நெய், எண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம் போல தயாரிக்கப்பட்டு விற்பனை நிலையங்களுக்கு மற்றும் சில்லறை விற்பயனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க : சென்னையில் நடந்த நடிகர் தனுஷ் நற்பணி இயக்க கூட்டம்.. மகளிருக்கு வெள்ளி விளக்கு பரிசு.. பேசியது என்ன?

15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு

குறிப்பாக தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கிய பால் பொருட்களின் விலை 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளது. இது ஆவின் பொருட்கள் நுகர்வோரிடம் பெறும் ஆதரவை தொடர்ந்து அதிகரிப்பதை காட்டும் விதமாக அமைந்துள்ளது. எனவே, ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us