சென்னையில் நடந்த நடிகர் தனுஷ் நற்பணி இயக்க கூட்டம்.. மகளிருக்கு வெள்ளி விளக்கு பரிசு.. பேசியது என்ன?
Dhanush Event At Chennai: தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் மகளிர் நிர்வாகிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 25, 2026: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ள அவர், அதன் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ‘தமிழக எழுச்சி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமனம்!
தனது நற்பணி இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் முதற்கட்டமாக, கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் மகளிர் நிர்வாகிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. முதலில் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி காலை 11 மணிக்குத் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காலதாமதம் ஏற்பட்டதால் பிற்பகல் 3 மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கியது.
மேலும் படிக்க: செஞ்சி 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 2-வது நாளாக பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை! 6 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாடியது ஏன்?
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர் நிர்வாகிகள் அனைவருக்கும் வெள்ளி காமாட்சி விளக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களுடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இரண்டு நிமிடங்களில் உரையை முடித்த தனுஷ்!
இந்தச் சந்திப்பில் நடிகர் தனுஷ் அரசியல் தொடர்பாக ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்றும், நீண்ட நேரம் பேசுவாரா என்றும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் சுமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: வாக்களிக்காதவர்கள் இல்லை வாக்களித்தவர்கள் கூட புலம்பும் நிலையில் தான் இன்றைய ஆட்சி இருக்கிறது – மு.க ஸ்டாலின் தாக்கு..
அப்போது பேசிய தனுஷ், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்ததுடன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார். இந்தச் சந்திப்பில் பங்கேற்ற மகளிர் நிர்வாகிகள் கூறுகையில், நன்றாகப் படிக்க வேண்டும் என்றும், நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குப் பத்திரமாகச் செல்ல வேண்டும் என்றும் தனுஷ் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தனர்.
நவம்பர் 4-ம் தேதி ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
இதற்கிடையே, வரும் நவம்பர் 4-ம் தேதி தனுஷின் ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அவர் அரசியல் தொடர்பாக ஏதேனும் பேசுவாரா அல்லது தனது அரசியல் திட்டங்கள் குறித்து சூசகமாகத் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.