எக்ஸ் பக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்வி… ஓம் படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட் – வைரலாகும் பதிவு!
Om movie team has responded to a fans question | நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஓம். இந்தப் படக்குழுவினர் எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலைத்துள்ளது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் (dhanush) நடிப்பில் தமிழ் மொழியில் உருவாகி வரும் படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் மம்முட்டி நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உடன் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓம் படக்குழு பதிலளித்துள்ளது.




ரசிகர் கேட்ட கேள்வி… ஓம் படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்:
அதன்படி இந்த ஓம் படத்தில் இருந்து முன்னதாக நடிகர்கள் தனுஷ் மற்றும் மம்முட்டியின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகிவிட்டது. சாய் பல்லவின் கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என்று அந்த ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ஓம் படக்குழு தயாரித்துக்கொண்டு இருக்கிறோம். விரைவில் வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… எனது ரசிகர்களுக்காக… ஒரு நாள் அவர்களை நான் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன் – அஜித் குமார்
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Cooking🔥🧑🍳
Will be served 🔜— Wunderbar Films (@wunderbarfilms) October 25, 2026
Also Read… தர்மன் படத்தை எப்போது வெளியிட படக்குழு திட்டம்? வைரலாகும் தகவல்