ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஜய் சேதுபதியின் பத்தா படக்குழு – வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்
Vijay Sethupathis Baththa Movie OTT Update | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் பத்தா. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தனது கடின உழைப்பின் காரணமாக தற்போது இந்த உயரத்திற்கு எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் அடியெடுத்து வைக்க நினைத்த பல இயக்குநர்களுக்கு இயக்குநராக அறிமுகம் ஆக உதவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். மற்ற மொழிகளில் பெரும்பாலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் வேடத்திலேயே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் பத்தா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஜய் சேதுபதியின் பத்தா படக்குழு:
இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி இருந்தார். காமெடி ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பத்தா படம் வருகின்ற 29-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
You’re not ready for Baththa’s rampage 😎🔥 https://t.co/zYiojr90Ry
— Netflix India South (@Netflix_INSouth) October 25, 2026
Also Read… Trisha: அரசியலுக்கு நீங்க வருவீர்களா மேடம்? திரிஷா கொடுத்த ரியாக்ஷன்!



