சீன் படம் யாரெல்லாம் பார்க்கலாம்… சூர்யா கொடுத்த சூப்பர் அப்டேட்
Suriya talks about Scene movie | நடிகர் சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். சமீபத்தில் துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூர்யா சீன் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்த ஆண்டில் இரண்டு படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது போல அடுத்ததாக இந்த 2026-ம் ஆண்டில் மூன்றாவதாக வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படமும் மாபெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி இந்த சீன் படத்தினை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக மலையாள சினிமாவில் இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்த சீன் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




சீன் படத்தினை அனைத்து வயதினரும் பார்க்கலாம்:
இது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஜித்து மாதவனின் ரோமாஞ்சம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த பாணியில், காக்க காக்க மற்றும் சிங்கம் படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைப் போல, இதையும் ஒரு ஒப்பீடாகக் கொள்ளலாம்.
இருப்பினும், இதை மற்றவற்றுடன் ஒப்பிட முடியாது. இந்த இன்பராஜ் முற்றிலும் வேறொரு ரகம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான, முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இந்த தீபாவளிக்கு உங்கள் குடும்பத்துடன் இணைந்து கண்டு ரசிக்க ஏற்ற மிகச்சிறந்த படம் இது என்று சூர்யா தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே… 23 ஆண்டுகளைக் கடந்தது பாலாவின் பிதாமகன் படம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
I’m sure you’ll love it! You may have watched Jithu Madhavan’s #Romancham and #Aavesham. In a similar way, this is like parallels between #KaakhaKaakha and #Singam.
But there’s no comparison here, this #Inbaraj is something else altogether! #Scene is a complete family entertainer, packed with fun and excitement for audiences of all ages, including kids. The perfect entertainer to enjoy with your family this Diwali!
– #Suriya https://t.co/CSedR9QGiu— Movies Singapore (@MoviesSingapore) October 24, 2026
Also Read… Ramya Krishnan: ராஜ மாதாவின் வருகை.. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுக்கும் ரம்யா கிருஷ்ணன்!