நலம் நலமறிய ஆவல், தஞ்சாவூரு மண்ணு எடுத்து… சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!
Singer Krishnaraj passed away | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பிரபலங்கள் குறிப்பாக இசைத் துறையில் உள்ள பிரபலங்கள் மறைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று பாடகர் கிருஷ்ணராஜ் உடல் நலக் குறைவு காரணமாக காலமான செய்து திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து துக்க செய்திகள் உலா வருகின்றது. அதன்படி முன்னதாக இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா (Deva) உடல்நலக் குறைவு காரணமாக தனது 76-வது வயதில் காலமானார். அவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலேயே தேவாவின் தம்பி பாடகர் சபேஷ் மகன் கார்த்திக் சபேஷ் மாரடைப்பால் காலமானார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் சபேஷ் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் பாடகராக தனது பயணத்தை தொடங்கினார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் தேவாவின் இசையில் தான் முதன்முறையாக பாடத் தொடங்கினார். அதன்படி இவர் அதிக அளவில் தேவாவின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகர் கிருஷ்ணராஜ் குரலில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்கள்:
அதன்படி பாடகர் கிருஷ்ணராஜ் குரலில் தமிழ் சினிமாவில் வெளியான நாட்டாமை படத்தில் நாட்டாமை பாதம் பட்டா பாடல், காதல் கோட்டை படத்தில் நலம் நலமறிய ஆவல், மாப்பிள்ளை கவுண்டர் படத்தில் நீல வானம், அருணாச்சலம் படத்தில் நகுமோ, பொற்காலம் படத்தில் சின்ன காணாங்குருவி மற்றும் தஞ்சாவூர் மண்ணெடுத்து ஆகியப் பாடல்களும், நினைத்தேன் வந்தாய் படத்திலிருந்து மனிஷா மனிஷா, நட்புக்காக படத்தில் மீசைக்கார நண்பா என பலப் பாடல்களைப் பாடியுள்ளார்.




அதுமட்டும் இன்றி இறுதியாக சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நாலு நிமிசம் உன்ன காணாம என்ற பாடலையும் பாடகர் கிருஷ்ணராஜ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடிய ப்ரும்பாலான பாடல்கள் இசையமைப்பாளர் தேவாவின் இசையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… மம்முட்டியின் படயாத்ரா படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
உடல்நலக் குறைவால் காலமானார் பாடகர் கிருஷ்ணராஜ்:
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்து இருந்த நிலையில் இன்று காலமானார். இந்த செய்தி சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது உடலுக்கு தொடர்ந்து பிரபலங்களும் ரசிகர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Also Read… பிக்பாஸில் உடைந்து அழுத அவினாஷ் அசோக்… வைரலாகும் வீடியோ