ப்ளடி ஸ்வீட்… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் லியோ படம்!
3 Years Of Leo Movie | தளபதி விஜய் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் லியோ. இந்தப் படம் தற்போது மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படக்குழு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநரின் மகனாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநராக கொடிக்கட்டிப் பறந்த காலக்கட்டத்தில் சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிக்கத் தொடங்கினார். இந்த திரையுலகில் வாரிசு நடிகர்களால பல நூறு பேர் சினிமாவிற்கு வந்து இருந்தாலும் அவர்கள் அனைவரும் வெற்றியடைந்தார்களா என்றால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. வாரிசு நடிகராக வந்தாலும் தனது கடின உழைப்பை கொடுத்த நடிகர்கள் மட்டுமே தற்போது திரையுலகில் எஞ்சி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நடிகர் விஜயும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகிய போது இருந்தே நடிகர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜயை ஆரம்ப காலக்கட்டத்தில் இளைய தளபதி என்றும் பிற்காலத்தில் தளபதி என்றும் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் தமிழக மக்கள் தளபதி விஜயை திரையில் மட்டும் இன்றி தமிழக அரசியலிலும் உச்சத்திற்கு கொண்டு அமர்த்தியுள்ளனர். ஆம் தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே அமர வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




3 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் லியோ படம்:
அந்த வகையில் நடிகர் விஜய் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றப் படங்களில் ஒன்று தான் லியோ. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்த நிலையில் கடந்த 19-ம் தேதி அக்டோபர் மாதம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து இருந்த நிலையில் வில்லன்களாக நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் மூன்றாவது ஆண்டை கொண்டாடும் நிலையில் படக்குழு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Also Read… Ramayana: ராமாயணா படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் செய்த சிறப்பான விஷயம்.. அட என்ன தெரியுமா?
லியோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
One man, two faces, zero chill, he goes by the name #LeoDas ❤️🔥
3 years of the madness 🐺 Still bloody sweet 🧊🔥
#3YearsOfLeo
https://t.co/wbvOtpIRyG#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss
— Seven Screen Studio (@7screenstudio) October 18, 2026
Also Read… ஆப்ரேஷன் அவசியம்.. பிக் பாஸிலிருந்து வெளியேறிய ராகவ் – கண்ணீர் வெள்ளத்தில் போட்டியாளர்கள்!