முதலமைச்சர் விஜயின் இந்த சூப்பர் ஹிட் படங்களுக்கு இசை தேனிசை தென்றல் தேவாதான் – தெரியுமா உங்களுக்கு?
List Of Movies Vijays music composed by Thenisai Thendral Deva | தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த தேனிசைத் தென்றல் தேவா நேற்று காலமானார். இந்த நிலையில் அவர் இசையமைத்த தளபதி விஜய் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் இசையமைப்பாளராக தனது பணியைத் தொடங்கினார் தேவா (Music Director Deva). இவர் பெரும்பாலும் கானா பாடல்களை இசையமைத்து வருவதால் இவரை கானா நாயகன் என்று கொண்டாடி வந்தனர். ஆனால் இவரது இசையில் வெளியான மெலோடி பாடல்களும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த தேவா நேற்று தனது 75-வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு திரியுலக பிரபலங்கள் நேரில் சென்று ஆறுதலை தெரிவித்ததுடன் தேவாவின் உடலுக்கு அஞ்சலியும் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று தேவாவின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்ப்பட உள்ளது. அவரது மறைவிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய தமிழ் நாட்டின் முதலமைச்சர் தளபதி விஜய் நாயகனாக நடித்துக் கொண்டு இருந்த காலத்தில் அவரது பலப் படங்களுக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… TTF Vasan: பிக் பாஸில் டைமண்ட் டாஸ்க்… டிடிஃஎப் வாசனை பாராட்டிய விஜய் சேதுபதி – வைரலாகும் ப்ரோமோ!




விஜயின் இந்த சூப்பர் ஹிட் படங்களுக்கு இசை தேனிசை தென்றல் தேவாதான்:
அந்த வகையில் தற்போதைய முதலமைச்சர் தளபதி விஜயின் நடிப்பில் மொத்தம் 69 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளது. அதில் இறுதியாக ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் இசையமைப்பாளர் தேவா இசையில் வெளியான படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், காலமெல்லாம் காத்திருப்பேன், ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, குஷி மற்றும் பகவதி என இத்தனைப் படங்களுக்கும் தேவாதான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள ஆனந்த் தேவரகொண்டாவின் எபிக் படம் எப்படி இருக்கு? விம்ரசனம் இதோ